/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
கீரை நோய் தாக்குதலுக்கு இயற்கை உரங்கள் சிறந்தவை
/
கீரை நோய் தாக்குதலுக்கு இயற்கை உரங்கள் சிறந்தவை
PUBLISHED ON : மார் 05, 2025

கீரைகளை தாக்கும் நோய்களை கட்டுப்படுத்தும் முறை குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திரூர் நெல் ஆராய்ச்சி மைய தாவர நோயியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் செ.சுதாஷா கூறியதாவது:
கீரை சாகுபடியில், நுாற்புழு தாக்குதல், தண்டு மற்றும் இலை பூஞ்சானம், பாக்டீரியா இலை புள்ளிகள் ஆகிய நோய்களின் தாக்கம் ஏற்படும்.
இதுபோன்ற நோய்களை, ரசாயன உரங்களை தெளித்து கட்டுப்படுத்த முடியாது. இயற்கை உரங்களை போட்டு எளிதாக கட்டுப்படுத்தலாம்.
குறிப்பாக, மண் மற்றும்காற்று வழியே தாக்கும்நோய் தாக்குதலைகட்டுப்படுத்தலாம்.
கீரை விதைக்கும் போது, வயலில் நீரை தேக்கி வைத்து, மண்ணுக்கடியில் இருக்கும் சில பூஞ்சானங்களை அழிக்கலாம்.
நிலத்தை பாலிதீன் போட்டு மூடுவதன் வாயிலாக முட்டைகள், நுாற்புழுக்கள், பூஞ்சானங்களைஅழிக்கலாம்.
மேலும், சோடியம் புகை மருந்து சொட்டு நீர் பாசனத்தின் வழியாக செலுத்தலாம்.
மட்கிய தொழு உரத்துடன் டிரைகோடெர்மாவிரிடி, சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் உயிர் தெளிக்கலாம். இதுதவிர, இலை வழியாக பரவும் நோய்களை வேப்பங்கொட்டைச்சாறு, பூண்டு, மிளகாய் கரைசல், பஞ்சகாவியா ஆகியவைதெளிக்கலாம்.
இவ்வாறு அவர்கூறினார்.
தொடர்புக்கு: முனைவர் செ.சுதாஷா,
திரூர்.
97910 15355