PUBLISHED ON : மார் 05, 2025

ரோஸ் ஆப்பிள் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த செடிகள் உற்பத்தி செய்யும் முன்னோடி விவசாயி கே.சசிகலா கூறியதாவது:
ரோஸ் ஆப்பிள் மரத்தை நம்மூரில் சாகுபடி செய்துள்ளேன். இது மாடி தோட்டம் மற்றும் விளை நிலங்களில், எளிதாக சாகுபடி செய்யலாம். அந்த அளவிற்கு நன்றாக வளரும் தன்மை உடையது.
நம்ம ஊரு மணல் கலந்த களிமண், சவுடு மண் உள்ளிட்ட பலவித மண்ணுக்கு ரோஸ் ஆப்பிள் செடி ஊட்டத்துடன் வளர்கிறது.
குறிப்பாக, ரோஸ் ஆப்பிள் செடியை, ஒட்டு கட்ட முடியாது. விதை உற்பத்தி வாயிலாகதான் செடியை உற்பத்தி செய்ய முடியும். இது, ஐந்து ஆண்டுகளுக்கு பின் மகசூல் கொடுக்கும். இந்த பழம் மஞ்சள், இளஞ்சிவப்பு ஆகிய இரு விதமான நிறங்களில் விளையும். இந்த பழத்தின் சுவை பன்னீர் நறுமணம் மற்றும் சுவையுடன் இருக்கும்.
எப்போதும் சந்தையில் புதிய விதமான பழங்களுக்கு வரவேற்பு வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இவ்வாறு அவர்கூறினார்.
தொடர்புக்கு: கே.சசிகலா,
72005 14168.