/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
சூரிய ஒளி பம்பு மூலம் வெற்றி அடைந்த விவசாயி
/
சூரிய ஒளி பம்பு மூலம் வெற்றி அடைந்த விவசாயி
PUBLISHED ON : செப் 25, 2013

தேனி மாவட்டம், சின்னமனூரில், பொன் நகரம் என்ற ஊரில் எனக்கு தென்னந்தோப்பு உள்ளது. எனது பெயர் பீ.கே.வி.நாராயணன். எனது தென்னந்தோப்பில் நீர்வரத்து இருந்தும் மின் பற்றாக்குறையால் எனது விவசாயம் பாதிக்கப்பட்டது. பின்னர் சூரிய ஒளி சக்தி மூலம் பம்புசெட்டை இயக்க முடிவு செய்தேன்.
பின்னர் பம்புசெட்டை இயக்கக்கூடிய பல நிறுவனங்களோடு தொடர்புகொண்டேன். குடிமங்கலத்தைச் சேர்ந்த சோலார் கேர் நிறுவனத்தார் வழங்கக்கூடிய ஐந்து வருட பராமரிப்பு சேவை என்னை மிகவும் கவர்ந்தது. பின்னர் அவர்களிடம் எனது தேவையான 7.5எச்.பி பம்பு செட்டிற்கு சோலார் கருவி அமைத்து தருமாறு கேட்டுக்கொண்டேன். எனது தோட்டத்தை ஆய்வுசெய்த பின் அவர்களின் பரிந்துரைப்படி தேவையான நீர் பாசனத்திற்கு சோலார் தகடுகள் மூலம் மின்சாரம் தயாரித்து தினமும் 8 - 10 மணி நேரம் வரை இயங்கக்கூடிய வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் தீர்வு அளிக்கப்பட்டது. தற்போது எனது தோட்டத்திற்கான நீர் பாசனத்தேவை முழுவதுமாக சோலார் கருவி மூலம் தீர்த்து வைக்கப்பட்டது. ஆதலால் எனது தோட்டத்திற்கு பெற்றிருந்த மின் இணைப்பையும் துண்டித்து விட்டேன். எனக்கு தேவையான மின்சக்தியை இயற்கைக்கு எந்த அழிவும் இல்லாமல் நானே உற்பத்தி செய்து கொள்ளும்படி நல்ல தீர்வை சோலார் நிறுவனம் வழங்கியுள்ளது. (தகவல்: சிவக்குமார், 94422 68142)
-கே.சத்தியபிரபா, உடுமலை.

