/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
ராமநாதபுரம் மாவட்டத்தில் பொன்னாய் நெல் குவிக்க நேரடி (பொடி) நெல் விதைப்பு
/
ராமநாதபுரம் மாவட்டத்தில் பொன்னாய் நெல் குவிக்க நேரடி (பொடி) நெல் விதைப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் பொன்னாய் நெல் குவிக்க நேரடி (பொடி) நெல் விதைப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் பொன்னாய் நெல் குவிக்க நேரடி (பொடி) நெல் விதைப்பு
PUBLISHED ON : அக் 02, 2013

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, தொண்டி, சாலைகிராமம் மற்றும் கைகாட்டி கிராமங்களில் விவசாயிகள் உற்சாகத்துடனும், நம்பிக்கையுடனும் புழுதிக்கால் சாகுபடியில் ஈடுபட இருக்கின்றனர். இம்மாவட்டங்களில்மண்ணின் தன்மை மணல் சார்ந்த இளக்கமான மண்ணாக உள் ளது. விவசாயிகள் டிராக்டர் மற்றும் டில்லர் கருவிகொண்டு நிலத்தை உழுது புழுதியாக்க வேண்டும். இந்த புழுதியை அப்படியே காயவிட வேண்டும். இது சமயம் அடிக் கும் வெயிலின் காரணத்தால் புழுதி ஒரு பங்காக சுண்டிவிடும். இதனால் மண்ணில் ஊட்டச்சத்துக்கள் அதிகரித்துவிடுகின்றன. விவசாயிகள் உடனே நிலத்திற்கு நன்கு மக்கிய இயற்கை உரத்தோடு பத்து பொட்டலங்கள் அசோஸ்பைரில்லம் கலந்து இடவேண்டும். இதுதான் அடியுரம். இந்த சமயத்தில் ரசா யன உரங்களை இடக்கூடாது. இது சமயம் மழை பெய்யலாம். பெய்யும் மழை, மண் வகை, சீதோஷ்ண நிலை இவைகளை கவனமாக கருத்தில் கொண்டு பின்வரும் நெல் ரகங்களில் ஏதாவது ஒன்றினை விவசாயிகள் தேர்ந் தெடுத்து சாகுபடி செய்யலாம்.
செல்லப்பொன்னி,ஆடுதுறை 36, ஆடுதுறை 45, எஎஸ்டி16, மட்டைநெல், ஜோதி, டி.கே.எம்.9, ஜே13(குச்சி நெல்), டீலக்ஸ் பொன்னி, ஜேசி நெல், சோனா மற்றும் ரோஸ்கார்.
பூமியில் இருக்கும் ஈரத்தைக் கருத்தில் கொண்டு கலப்பை ஓட்டி விதையினை மண்ணால் மூடி அடுத்து பரம்படித்துவிட்டால் விதை முளைக்கும் சூழ்நிலை ஏற்படும். விதை விதைத்த 15ம் நாள் மேலுரமாக 25 கிலோ டி.ஏ.பி, 15 கிலோ யூரியா, 15 கிலோ பொட்டாஷ் இடவேண்டும். விதைத்த 20ம் நாள் ஒரு கைக்களை எடுக்கலாம். ஏற்கனவே அரும்பாடுபட்டு புழுதி உழவு செய்திருந்தால் பெரிய அளவில் களைப்பிரச்னை வராது. அடுத்த மழை வந்தபின் 10 கிலோ யூரியா, 10 கிலோ பொட்டாஷ், இவைகளை இரண்டாவது மேலுரமாக இடலாம். இந்த தருணம் விதை விதைத்த 35ம் நாள் வரும். உடனே பணியை செய்ய வேண்டும். அடுத்த கட்டமாக வளரும் பயிர்களுக்கு பூச்சி, வியாதிகள் தாக்காமல் இருக்க பணிகள் செய்ய வேண்டும். புழுதிக்கால் சாகுபடியில் விவசாயிகளுக்கு உடனே பயத்தைக் காட்டுவது பூஞ்சாள நோயாகும். குறிப்பாக குலைநோய் மிகவும் கொடியது. விவசாயிகள் விவசாய இலாகா அதிகாரிகளை அணுகினால் அவர்கள் பயிரில் நோய்கள் வராமல் தடுத்து விடுவார் கள். இதற்குள் பயிர்கள் அறு வடைக் கட்டத்தை நெருங்கும். அப்போது கதிரின் அடி பாகத்தில்உள்ள 4, 5 நெல் மணிகள் பசுமையாக இருக்கும். ஆனால் இதர நெல் சுமைகளை தலையில் தூக்கி வரும்போது நெல்மணிகள் உதிர்ந்து வீணாவதில்லை. இம்மாதிரியாக விவசாயிகள் பணிசெய்தால் விளைச்சல் திறன் அதிகரிக்கின்றது.
மழையை நம்பி நேரடி விதைப்பில் விவசாயிகள் ஒரு ஏக்கர் நெல்லில் உத்தேசமாக ரூ.10,000ம் வைக்கோலில் ரூ.2000ம் எடுப்பார்கள். விவசாயிகள் விஞ்ஞானிகளை அணுகி நெல் பயிரை கரையான் பாதிக்காமல் இருப்பதற்கு தகுந்த அறிவுரைகளை தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.
-எஸ்.எஸ்.நாகராஜன்

