sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

வளம் தரும் வேளாண் காடுகள்; கால்குவாரிகளுக்கு இடையே 25 ஏக்கரில் பிரமிக்கவைக்கும் உணவுக்காடு!

/

வளம் தரும் வேளாண் காடுகள்; கால்குவாரிகளுக்கு இடையே 25 ஏக்கரில் பிரமிக்கவைக்கும் உணவுக்காடு!

வளம் தரும் வேளாண் காடுகள்; கால்குவாரிகளுக்கு இடையே 25 ஏக்கரில் பிரமிக்கவைக்கும் உணவுக்காடு!

வளம் தரும் வேளாண் காடுகள்; கால்குவாரிகளுக்கு இடையே 25 ஏக்கரில் பிரமிக்கவைக்கும் உணவுக்காடு!

1


PUBLISHED ON : ஆக 01, 2025

Google News

PUBLISHED ON : ஆக 01, 2025

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மண்ணிற்கு வளத்தையும், விவசாயிகளுக்கு வருமானத்தையும் கூட்டுகிறது வேளாண் காடுகள் எனும் மரம் சார்ந்த விவசாய முறை. அந்த வகையில் 'வளம் தரும் வேளாண் காடுகள்' தொடரில் வெற்றி பெற்ற முன்னோடி விவசாயிகளின் அனுபவ பகிர்வுகளை கேட்போம் வாருங்கள்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே ஓடைமரிச்சான் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமகிருஷ்ணன். ஈஷா காவேரிக் கூக்குரல் இயக்கத்தின் வழிகாட்டுதலால் கல்குவாரிகள் நிறைந்த பகுதியில் 25 ஏக்கர் வேளாண் காட்டை உருவாக்கி பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து, அவர் நம்மிடையே கூறியது: 2007 ஆம் ஆண்டு நிலம் வாங்கினோம். அதன் பிறகு நிலம் பயன்பாடு இல்லாமல் கிடந்தது. இந்நிலையில், 2018ல் புளியங்குடியில் காவேரி கூக்குரல் இயக்கம் நடத்திய மரப்பயிர் சாகுபடி பயிற்சியில் நானும் அப்பாவும் கலந்துகொண்டோம். மரம் நட்டு பராமரிக்க வேண்டும் என்ற எண்ணம் அக்கருத்தரங்கில் தான் எங்களுக்கு தோன்றியது. அதை உடனடியாகச் செயல்படுத்தும் விதமாக ஆரம்ப கட்டப் பணிகளைத் தொடங்கினோம்.

காவேரி கூக்குரல் களப்பணியளார்கள் தேவையான உதவிகளை செய்தனர். பின்னர் அப்பாவின் ஆசைப்படியே ஒரு வேளாண்காட்டை உருவாக்கினோம். 78 வயதான என் அப்பா, ஆங்கில இலக்கியத்தில் எம்.ஏ., வரை படித்தவர். அக்காலத்தில் நல்ல கல்வித்தகுதி இருந்தும் விவசாயத்தை உயிராய் நினைத்ததால், வேறு வேலைக்கு செல்லாமல் விவசாயத்தில் முழு மூச்சாய் ஈடுபட்டார் என்றார்.

மரப்பயிர் நடவு குறித்து அவர் கூறுகையில், ' 2020ம் ஆண்டில் பத்து ஏக்கர், கடந்த ஆண்டு 15 ஏக்கர் என மொத்தமாக 25 ஏக்கரில் டிம்பர் மரங்கள் நடவு செய்துள்ளோம். மீதி உள்ள நிலத்தில், 5 ஏக்கர் நிலம் மழை நீர் சேகரிப்புக்காக ஒதுக்கியுள்ளோம். அதில் ஒரு பெரிய பண்ணைக் குட்டை வெட்டி, மழைநீர் சேமிக்கிறோம்.

பூர்வீக நிலத்தில் அப்பாவின் விருப்பப்படி இயற்கை விவசாயம்

செய்கிறோம். 10 ஏக்கரில் தென்னை, வாழை, நெல் சாகுபடி செய்து வருகிறோம். பருவகால பயிராக சாமந்தி மற்றும் காய்கறிகளையும் சாகுபடி செய்கிறோம். 2020ம் ஆண்டு நடவு செய்த மரங்கள் அனைத்தும் நன்றாக வளர்ந்துள்ளன.

செம்மண், செஞ்சரளை மற்றும் வண்டல் கலந்திருப்பதால் செம்மரம் மற்றும் தேக்கு மரங்கள் அதிகமாக நடவு செய்யப்பட்டுள்ளன.

10 x 10 அடி இடைவெளியில் தேக்கு மற்றும் செம்மரம் வரிசை வரிசையாக நடவு செய்யப்பட்டுள்ளன.

மரங்கள் 4 ஆண்டுக்கான நல்ல வளர்ச்சி பெற்றுள்ளன. பண்ணையில் தோராயமாக தேக்கு 2500, செம்மரம் 3500, கருமருது 500, சந்தனம் 600 மரங்களுடன் வேப்ப மரங்களும் உள்ளன என்றார்.

கவாத்து, உயிர் வேலி குறித்து அவர் கூறுகையில், '15 அடிக்குமேல் மரங்கள் வளர்ந்த நிலையிலும், 6 அடி உயரத்திற்கு மட்டும் கவாத்து செய்யப்பட்டுள்ளது. கவாத்து செய்த இலைகளை மரத்திற்கு மூடாக்காக போட்டுவிட்டு, கழிகளை முழுவதுமாக சேகரித்து வேலி ஓரங்களில் போடுவதால் உயிர் வேலியில் வளரும் செடிகளுக்கு பாதுகாப்பாக உள்ளது. அருகில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து மான் மற்றும் காட்டுப்பன்றிகள் பண்ணைக்கு வருவதால் வேலி ஓரங்களில் சிசு மற்று நாவல் மரங்களை நடவு செய்துள்ளோம். அந்த மரங்களை கவாத்து செய்வதில்லை என்பதால் அம்மரங்கள் நன்கு கிளைத்து வளர்ந்து, நல்ல உயிர்வேலியாக பண்ணைக்கு பாதுகாப்பைத் தருகிறது.

தமிழ்நாட்டில் வறண்ட பகுதிகளில் மட்டுமல்லாது அனைத்து பகுதிகளிலும் கள்ளி நன்றாக வளர்கிறது. மர விவசாயம் செய்பவர்கள் இவற்றை உயிர்வேலியாக நடுவது அவசியமாகும். முக்கியமாக செம்மரம் மற்றும் சந்தனம் சாகுபடி செய்பவர்கள் கள்ளி ரகங்களை உயிர்வேலியாக அமைக்க வேண்டும். சப்பாத்தி கள்ளியிலேயே பல ரகங்கள் உள்ளன, அந்தந்த பகுதிகளில் சிறப்பாக வளரும் கள்ளி ரகங்களை தேர்வு செய்து நடவுசெய்வது அவசியம்.

ஊடுபயிர் குறித்து அவர் கூறுகையில், 'பண்ணையில் நடவு செய்த மரங்கள் நன்றாக வளர்ந்துள்ளதால், ஊடுபயிராக மிளகு பயிரிடத் திட்டமிட்டுள்ளேன். அந்த வகையில், கரிமுண்டா மிளகு ரகங்களை பண்ணையின் மையப் பகுதியிலும், பன்னியூரா ரகங்களை வேலி ஓரங்களிலும் நடவு செய்ய உள்ளேன். மண் வளம், நீர் வளம் சிறப்பாக உள்ளதால் மரம் வேகமாக வளர்கிறது, எனவே அடுத்தமுறை மரங்கள் நடவு செய்யும்போது 10 x 10 இடைவெளி பதிலாக 15 x 15 அடி இடைவெளியில் மரக்கன்றுகளை நடவு செய்ய உள்ளேன்.

ஈஷா களப்பணியாளர்களின் அறிவுறுத்தலால் தான், சரியான நேரத்தில், அளவாக கவாத்து செய்தேன், அதனால்தான் மரம் நன்றாக பருத்து வளர்ந்துள்ளது. ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் நடத்திய பயிற்சியில் கலந்துகொண்டபின் மரங்கள் நடுவதற்கு தைரியம் வந்தது. காவேரி கூக்குரலின் பணி, மென்மேலும் வளர வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us