sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

கூட்டுமீன் வளர்த்து வளம்பெறலாம்

/

கூட்டுமீன் வளர்த்து வளம்பெறலாம்

கூட்டுமீன் வளர்த்து வளம்பெறலாம்

கூட்டுமீன் வளர்த்து வளம்பெறலாம்


PUBLISHED ON : மே 23, 2012

Google News

PUBLISHED ON : மே 23, 2012


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நன்னீர் கெண்டை மீன் வகைகள் பலவற்றை ஒரே குளத்தில் கலந்து வளர்க்கும் முறை கலப்பின வளர்ப்பாகும். இந்த மீன்கள் ஒரு குறிப்பிட்ட அளவு வளர 8-10 மாதங்கள் வரை நீர் தேவைப்படும். பொதுவாக மீன் வளர்ப்பு குளத்தின் அளவு ஒரு எக்டர் (இரண்டரை ஏக்கர் அல்லது 10,000 ச.மீ.) ஆக இருத்தல் நல்லது. இதை ஐந்து குளங்களாக ஒவ்வொன்றும் அரை ஏக்கர் என்ற அளவில் அமைத்துக் கொள்ள வேண்டும். குளத்தின் வடிவம் செவ்வகமாக இருப்பின் கையாள எளிது.

நீரின் தன்மைகள்: ஆழம்-1மீட்டர், வெப்பம்-25-32 டிகிரிசெ, உப்புத் தன்மை-0-2.5 மி.கி. சோடியம் குளோரைடு/லி, கடினத்தன்மை-20-300 மி.கி. கால்சியம், மக்னீசியம்/லி, கார அமிலத்தன்மை-6.5-9.0, நுண்ணுயிர் இருப்பளவு ஆழம்-30-60 செ.மீ., உயிர் வளி - 5 மி.கி/லி

உரமிடுதல் (ஒரு எக்டர்/ஒரு வருடம்): மாட்டு சாணம்-10,000 கிலோ, யூரியா-200 கிலோ, சூப்பர் பாஸ்பேட்-250 கிலோ, பொட்டாஷ்-40 கிலோ. இவைஅனைத்தையும் 10 பங்குகளாக பிரித்து வைக்கவும். இரு வாரங்களுக்கு ஒரு முறை ஒரு பங்கை இடவும். இயற்கை மற்றும் செயற்கை உரங்கள் மாற்றி மாற்றி இடவும்.

முதல் பங்கு உரமிட்டு 15 நாட்களுக்குப் பின் பசுமையாக மாறியதும் விரல் அளவு மீன் குஞ்சுகளை இருப்பு செய்ய வேண்டும்.

இருப்பு செய்தல்: கட்லா-25%, ரோகு-15%, மிர்கால்-20%, வெள்ளிக் கெண்டை-10%, புல்கெண்டை-10%, சாதாக்கெண்டை-20%, அதிகபட்ச இருப்பு எண்ணிக்கை - 10,000/எக்டர், அதிகாலையில்/மாலையில் மீன்களை இணங்கவைத்து இருப்பு செய்யவும்.

தகுந்த உணவு பொருட்கள்: அரிசித்தவிடு, கோதுமை தவிடு, கடலை புண்ணாக்கு, எள்ளு புண்ணாக்கு, சோயா மொச்சை, குச்சிகிழங்கு திப்பி, பட்டுப்பூச்சி கூட்டுபுழு.

உணவிடுதல்: தவிடு மற்றும் புண்ணாக்கினை 1:1 என்ற விகிதத்தில் கலந்து தினமும் உடல் எடையில் 5 சதவீதம் இடவேண்டும். நன்றாக நீரில் ஊறவைத்து உருண்டைகளாக பிரிக்கவும். சில உருண்டைகளை வளைத்தட்டில் வைத்து குளக்கரையில் வைக்கவும். மீதம் உள்ள உணவு உருண்டைகளை உடைத்து பரவலாக இடவேண்டும்.

மீன் அறுவடை: பயிர் காலம் 10 மாதம், வளர்ச்சி-1 கிலோ முதல் 1.25 கிலோ/மீன். ஒரு எக்டரில் சராசரியாக 5-7 டன் அறுவடை செய்யலாம். மீன் வளர வளர 6வது மாதத்தில் இருந்து அறுவடை செய்யலாம்.

மீன் குஞ்சுகள் வாங்க தொடர்பு கொள்ளவும்: 1. மேலாளர், தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகம், பவானி சாகர் அணை, பவானிசாகர், ஈரோடு.

2. மேலாளர், தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகம், ஆழியார் நகர், கோவை மாவட்டம்.

3. மீன்துறை உதவி இயக்குனர், மேட்டூர் அணை, மேட்டூர், சேலம். 04298-244 045.

மேலும் விபரங்களுக்கு: விரிவாக்கக் கல்வி இயக்ககம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால்பண்ணை வளாகம், சென்னை-600 051.

044-2555 4375/2555 6750.

மின்னஞ்சல்: deetanuvas@gmail.com, dee@tanuvas.org.in.

இணையதளம்: www.tanuvas.ac.in.

-எம்.ஞானசேகர்,

தொழில் மற்றும் விவசாய ஆலோசகர்.






      Dinamalar
      Follow us