/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
மா மரத்தில் ஒட்டுச்செடிகள் வெட்டி அகற்ற வேண்டும்
/
மா மரத்தில் ஒட்டுச்செடிகள் வெட்டி அகற்ற வேண்டும்
PUBLISHED ON : நவ 26, 2025

மாமரத்தில் வளரும், ஒட்டுச்செடிகளை அகற்றுவது குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திரூர் நெல் ஆராய்ச்சி மைய தாவர நோயியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் செ.சுதாஷா கூறியதாவது:
மா, கொய்யா, சப்போட்டா ஆகிய மரங்களில், பழ அறுவடை சீசன் முடிந்தபின், பழ மரங்களில் தேவையற்ற ஒட்டுச்செடிகள் வளரும். குறிப்பாக, மைனா, புல் புல் பறவைகளின் எச்சம் மரக்கிளைகளில் ஒட்டும் தன்மையுடன் இருப்பதால், ஒட்டுச்செடிகள் வளர வாய்ப்புகள் உள்ளன. இதுபோன்ற ஒட்டுச்செடிகளை, மரத்தில் இருந்து முற்றிலும் வெட்டி அகற்ற வேண்டும். அப்போது தான், இழப்பின்றி அடுத்த பருவத்திற்கு மகசூல் கொடுக்கும். இல்லையேல், பழ மரங்கள் உலர்ந்து, வேருடன் அகற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: செ.சுதாஷா, 97910 15355.

