/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
கயிறு பொருள் தயாரிக்க அதிக வாய்ப்பு: இந்திய அரசு கயிறு வாரியம் ஊக்குவிப்பு
/
கயிறு பொருள் தயாரிக்க அதிக வாய்ப்பு: இந்திய அரசு கயிறு வாரியம் ஊக்குவிப்பு
கயிறு பொருள் தயாரிக்க அதிக வாய்ப்பு: இந்திய அரசு கயிறு வாரியம் ஊக்குவிப்பு
கயிறு பொருள் தயாரிக்க அதிக வாய்ப்பு: இந்திய அரசு கயிறு வாரியம் ஊக்குவிப்பு
PUBLISHED ON : மார் 21, 2018

இந்திய அரசின் கயிறு வாரித்தால் நடத்தப்படும் பயிற்சி, கடன், மானிய உதவிகள், புதிய கண்டுபிடிப்புகள் தமிழகம் மற்றும் கேரளாவில் கயிறு, கயிறு பொருட்கள், கயிறு கழிவு உரம் ஆகிய தயாரிப்பு தொழிலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. புதிய இயந்திரங்களை கண்டு பிடித்து, அவற்றை தயாரித்து, இயக்கப் பயிற்சி கொடுத்து, தொழில் தொடங்க இந்திய கயிறு வாரியத்தின் கீழ் ஆலப்புழாவில் இயங்கி வரும் 'மத்திய கயிறு ஆராய்ச்சி மையம்' உதவி வருகிறது.
தமிழ்நாட்டில் குக்கிராமத்தில் நடைபெறும் கயிறு, கயிறு மிதியடி, கயிறு தரை விரிப்பு தயாரிப்பு தொழிலை புதிய முறையில், நவீன இயந்திரத்தில் விரைவாய் தயாரிக்க 'நியூமேடிக்' தறி சந்தைக்கு வந்துள்ளது. முன்பு கைத்தறியில் கயிறு மிதியடி, விரிப்பு ஆகியவை தயாராகி வந்தது. இதில் தயாரிப்பதை விட அதிக அளவில் நியூமேட்டிக் தறியில் தயாரிக்கலாம்.
இந்த புதிய கருவியில் கைத்தறியில் உள்ள பல பழைய தேவையற்ற அம்சங்கள் மாற்றப்பட்டுள்ளன.
அதிக உற்பத்தி செய்வதற்கு ஏற்றுவாறு இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய அம்சம் ஒரு பெண் கூட மிக இலகுவாக இயக்கலாம் என்பதே.
அனுபம் தறிகள்: பெண்கள் எளிதாய் இயக்கலாம். இவ்வகை இயந்திரத்தில் வேலை பார்க்க ஒரே ஒருவர் போதும். மிதியடிகள் ஒரே ஒரு நீளத்தில் தயாரிக்கலாம். குறைந்த பராமரிப்பு செலவில் அதிகம் உற்பத்தி செய்யலாம். தானியங்கி ஆக மாற்றி கொள்ளலாம். தயாரிக்கும் (அடிக்கும்) வகை முறைப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து விதமான மிதியடிகள், பாய்கள், விரிப்புக்களை ஒரே தறியில் தயாரிக்க முடியும்.
கைத்தறி: இதனை இயக்க உடல் வலிமை உள்ள ஆண்கள் தேவை. ஒரு தறிக்கு கட்டாயம் இரண்டு ஆட்கள் தேவைப்படும். ஒரே அளவுள்ள மிதியடிகள் மட்டுமே தயாரிக்க இயலும். குறைவாகவே உற்பத்தி செய்ய முடியும். அதிக நேரம் பராமரிப்புக்கு தேவை. செலவும் அதிகம். கையால் மட்டுமே இயக்கலாம். ஆட்டோமேட்டிக் ஆக மாற்ற இயலாது. அடிக்கும் (தயாரிப்பு) விசை முறைப்படுத்தப்படவில்லை. ஒரு தறியில் ஒரே ஒரு பொருள் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. சுய தொழில் துவங்க, ஆலோசனை, பயிற்சி, கடன், மானியம் பெற 'வளர்ச்சி அலுவலர், மண்டல விரிவாக்க மையம், பிள்ளையார்பட்டி அஞ்சல், வல்லம் (வழி), தஞ்சாவூர் - 613 403' தொலைபேசி 04362 -264 655ல் தொடர்பு கொள்ளலாம்.
- எம்.ஞானசேகர்,
தொழில் ஆலோசகர்,
சென்னை.

