
ஒவ்வொரு மனிதனுக்குள் தேவையான சக்தியை நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரைப் பொருட்களில் இருந்து கிடைக்கிறது. தேன் மனிதனுக்கு சர்க்கரையையும், சக்தியையும் தருகிறது. தேன் உணவு மட்டுமல்ல, இயற்கை கொடுத்த மருந்துப் பொருள் ஆகும். ஆயுர்வேத/யுனானி மருத்துவத்தில் தேன் முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்லீரல் நோய்களுக்கு மருந்தாகவும், நல்ல மலமிளக்கியாகவும் பயன்படும் தேன் இதய நோயைத் தீர்க்கும் மருந்தாகும். தீக்காயம், வெட்டுக்காயம் ஆகியவற்றை ஆற்ற தேன் பயன்படுகிறது.
தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து இரத்த நாளங்களை சீராக விரிவடையச் செய்து இரத்த ஓட்டத்தைச் சீராக்கும். பல்வேறு விதமான கண் நோய்களுக்குத் தேனை விட சிறந்த மருந்து இல்லை. கர்ப்பிணிப் பெண்களுக்கும், குழந்தை பிறந்த பின் தாய்மார்களுக்கும் தேன் மிக நல்லது. சத்து குறைபாடு உள்ளவர்கள் தேனைப் பருகினால் நலம் பெறலாம்.
குழந்தைகளுக்கு ஏற்படும் டைபாயிட், நிம்மோனியா, தொண்டை அடைப்பான் மற்றும் வயிற்றுப்போக்கும் காரணமான கிருமிகளை அழிக்கும் ஆற்றல் பெற்றது. கணைச்சூடு, சொறி, பல்ஈறு வீக்கம், இருமல் போன்றவற்று மருந்தாகும். காபி, டீ, சுக்கு காபி, மூலிகை டீ போன்றவை பருகும் போது இனிப்புக்குப் பதிலாக தேனைப் பயன்படுத்தினால் உடலுக்கு மிக நன்மை பயக்கும்.
உலர்ந்த சருமம் உடையவர்கள் வெண்ணீரில் தேனைக் கலந்து குடித்தால் சருமத்திற்கு நல்லது. மெலிந்தவர்கள் தேனைப் பருகி வந்தால் உடல்வாகு சீராக வாய்ப்பு உள்ளது. தினமும் காலையில் தேன் சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பைக் கரைத்து விடும்.
பலவகை உணவுப் பலகாரங்கள் செய்ய, கசப்பு மருந்து / மூலிகை சாறுடன் கலந்து சாப்பிட பயன்படுகிறது. பலவகை நோய்களுக்குப் பயனுள்ள மருந்தாகப் பயன்படும் தேனைக் கொடுக்கும் தேனீக்களை வளர்க்கலாம். பயன் பெறலாம். இதற்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பல இடங்களில் பயிற்சி அளிக்கிறது.' முழு விபரம் பெற www.tnau.org.
- எம்.ஞானசேகர்,
தொழில் மற்றும் விவசாய ஆலோசகர்,
97503 33829

