தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/மாண்பு தரும் வேம்பு

மாண்பு தரும் வேம்பு

மாண்பு தரும் வேம்பு


PUBLISHED ON : மே 27, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 27, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியா, மியான்மர், இலங்கை உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகள், மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் வேப்ப மரம் அதிகம் விளைகிறது. 200 ஆண்டுகளுக்கு மேலாக உயிர் வாழ்ந்து உயிரினங்களுக்கு நன்மை தருகிறது. சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருத்துவங்களில் 2 ஆயிரம் ஆண்களுக்கும் மேலாக வேம்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் 'நேஷனல் அகாடமி ஆப் சயின்ஸ்' 1992 ல் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில், வேப்ப இலை, காய், பூ, பழம், விதை, பட்டை, பிசின், வேர், எண்ணெய் உள்ளிட்ட அனைத்து பாகங்களிலிருந்தும் 13 வேதியியல் பொருட்கள் உள்ளது,' கூறியுள்ளது.

சிறந்த பூச்சிக்கொல்லி நிம்பின், நிம்பிடின், நிம்போலிடின், ஐடியுமின், ஐட்டசின், அசடிரேக்கிடின், மெக்மோடின் போன்ற வேதியியல் பொருட்களால் வேப்ப மரத்திற்கு பல மருத்துவ குணாதியங்கள் இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

வேப்ப மரத்தின் தாக்கம் கிட்டத்தட்ட 500 வகையான பூச்சிகளின் மேல் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. தாவரங்கள் மீது வேப்ப மருந்துகளை தெளிக்கும் போது அப்பூச்சிகள் உணவு உட்கொள்ளாமல் வளர்ச்சி குன்றி இறந்து விடுகின்றன.

அப்பூச்சிகள் இடும் முட்டைகள் குஞ்சு பொரிக்காமல் அழிந்து விடும். விவசாயத்தில் ஒரு நல்ல பூச்சிக்கொல்லி மருந்தாகவும், எருவாகவும், மரப்பொருளாகவும் வேப்ப மரம் பயன்படுகிறது.

-எம்.ஞானசேகர்

வேளாண் ஆலோசகர்,சென்னை

95662 53929


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us