PUBLISHED ON : ஜூன் 02, 2020

மழைத்துாவி என்பது தெளிப்பு நீர்ப்பாசனத்தின் பெரிய அமைப்பாகும். இதன் மூலம் ஒரு நிமிடத்திற்கு 500 லிட்டர் நீரை 90 அடி விட்டத்திற்கு செயற்கை மழையை போன்று பயிருக்கு அளிக்க இயலும். மழைத்துாவியின் இயக்க அழுத்தம் 45 முதல் 7.5 கிலோ சதுர செ.மீ., மணிக்கு 2.5 முதல் 3.5 மி.மீ., என்ற அளவில் தெளிப்பு திறன் இருக்கும்.
இக்கருவியை சாகுபடி திட்டத்திற்கோ அல்லது பயிரின் தன்மைக்கோ ஏற்றபடி ஒரே இடத்தில் நிலையாகவோ அல்லது இடத்திற்கு இடம் மாற்றியமைத்தோ பயன்படுத்தலாம். குறிப்பாக கரும்பு, பயறு வகைகள், எண்ணெய் வித்து பயிர்கள், காய்கறிகள், தானிய பயிர்கள் போன்றவற்றில் இக்கருவியை பயன்படுத்தலாம்.
மேலும் பரந்த புல்வெளிகள், விளையாட்டு திடல், மலைத்தோட்ட பயிர்களான தேயிலை, காபி போன்றவற்றிற்கும் பயன்படுத்தலாம். மழை பெய்யாத வறண்ட காலங்களில் இருக்கும் குறைந்த நீரை கொண்டு இந்த மழைத்துாவி தெளிப்பு நீர்ப்பாசன கருவி மூலம் நீர்ப்பாசனம் செய்திடலாம். தவிர குறைந்த நேரத்தில் அதிக பரப்பளவில் 2 தொழிலாளர் மூலம் பாசனம் செய்ய முடியும்.
த.விவேகானந்த்
வேளாண் இணை இயக்குனர்
மதுரை
94439 90964
