sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

மாடுகளில் உண்ணிகளைத் தவிர்ப்பது எப்படி

/

மாடுகளில் உண்ணிகளைத் தவிர்ப்பது எப்படி

மாடுகளில் உண்ணிகளைத் தவிர்ப்பது எப்படி

மாடுகளில் உண்ணிகளைத் தவிர்ப்பது எப்படி


PUBLISHED ON : அக் 23, 2013

Google News

PUBLISHED ON : அக் 23, 2013


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோடைக்காலங்களில் மாடுகளை அதிகமான அளவில் உண்ணிகள் தாக்கும். இந்த உண்ணிகள் பெரும்பாலும் மாடுகளில் அவற்றின் காதுகளின் உள்ளேயும் பால்மடிப்பகுதியில் வாலுக்கு அடியிலும், உடலின் மேற்புறத்திலும் இருக்கும். இதனாலே என்ன பிரச்னை என்று கேட்கிறீர்களா? உண்ணி இருந்தால் நாங்கள் கையில் பிடித்து நெருப்பில் போட்டுவிடுவோம் என்று சொல்கிறீர்கள். இங்க பாருங்க!

இந்த உண்ணிங்க ரத்தத்தை குடிக்க கடிப்பதால் கொசுக்கள் மனிதர்களை கடித்து மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சலை பரப்புவதுபோல உண்ணிகளும் மாடுகளில் நிணநீர் கட்டிநோய் (தெய்லீரியோசிஸ்), ரத்த சிறுநீர் நோய் (பேபிசியோசிஸ்) போன்ற நோய்களை பரப்பும். இந்த தெய்லீரியோசிஸ் நோய் பாதிக்கப்பட்ட மாடுகளில் அதிகமான காய்ச்சல், ரத்தசோகை, தீவனம் எடுக்காமை, கண், மூக்கில் இருந்து நீர் வடிதல், மூச்சு விட சிரமப்படும். மேலும் 20 லிட்டர் கறக்கும் மாடுகூட அரை லிட்டர் பாலுக்கு வந்துவிடும். பேபிசியோசிஸ் நோய் பாதிக்கப்பட்ட மாடுகள் அதிக காய்ச்சல், ரத்தசோகை, சிறுநீரானது ரத்தம் போல வரும். எனவே இந்த நோய்களிலிருந்து மாடுகளை காப்பாற்ற வேண்டுமென்றால் உண்ணிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அதாவது உண்ணிகள் ரத்தத்தில் ஓரணு ஒட்டுண்ணி நோய்களை பரப்புவதோடு மட்டுமல்லாமல் உண்ணிகள் அதிகமாக இருந்தால் ஆடு, மாடுகள் தலையை ஆட்டிக் கொண்டும், சுவற்றில் தேய்த்துக்கொண்டும், தீவனம் உண்ணாமல் மெலிந்தும் காணப்படும். நீங்கள் சொன்ன மாதிரி உண்ணிகளை கையில் பிடித்து நெருப்பில் போடுவது, மாடு மேல் மண்ணெண்ணெய் தடவுவது போன்று செய்யாமல் பூடாக்ஸ் மருந்தை வாங்கி 1 லிட்டர் தண்ணீரில் 2 மிலி மருந்து சேர்த்து கலந்து துணியில் நனைத்து மாடுகளின் எல்லா பாகத்திலும் தேய்க்க வேண்டும். குறிப்பாக மாடுகளின் காதுகளின் உட்புறம், மடிப்பகுதியில் நன்கு தேய்க்க வேண்டும்.

மேலும் இந்த மருந்து கலந்த தண்ணீரை கொட்டகையினுள் தரை, சுவற்றிலும் தெளிக்க வேண்டும். ஏனெனில் உண்ணிகள் ரத்தத்தை குடித்துவிட்டு தரையில் முட்டைகளை இட இருக்கும். ஒரு உண்ணி சுமார் 18,000 முட்டைகளை இடும். ஒரு உண்ணியை விட்டாலும் அதிலிருந்து 18,000 உண்ணிகள் பெருகி கால்நடைகளில் ஏறிக்கொள்ளும். எனவே உண்ணிகளை தடுக்க மாடுகளின்மேலும் கொட்டகையின் தரை மற்றும் சுவற்றிலும் உண்ணிநீக்க மருந்தை தெளிக்க வேண்டும். (தகவல்: முனைவர் .சௌந்தரராஜன், பேராசிரியர், கால்நடை ஒட்டுண்ணியியல் துறை, சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரி, சென்னை-600 007. போன்: 044-2530 4000. விரிவு: 2042. மின்னஞ்சல் soundarvet 1970@yahoo.com.

முனைவர் தே.தியாகராஜன், பிஎச்.டி.,

சென்னை-600 051






      Dinamalar
      Follow us