sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

சின்ன சின்ன செய்திகள்

/

சின்ன சின்ன செய்திகள்

சின்ன சின்ன செய்திகள்

சின்ன சின்ன செய்திகள்


PUBLISHED ON : அக் 30, 2013

Google News

PUBLISHED ON : அக் 30, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண்மை இணையதளம் (http:\\agritech.tnau. ac.in/index இந்த இணையதளம் வழியாக பயிர் சார்ந்த html) தொழில்நுட்பங்கள் மட்டுமல்லாது அனைத்து வகை தகவல்களையும் ஒரே இணையதளத்தில் கிடைக்குமாறு வழிவகை செய்யப்பட்டுள்ளது. அனைத்து தகவல்களும், தமிழ், ஆங்கில மொழிகளில் வழங்கப்படுகின்றன.



கானொலி கருத்தரங்கு தொழில்நுட்பம்:
(video conferencing) என்பது ஒருவருக்கொருவர் நேரிடையாக முகம்பார்த்து பேசுவது போல தகவல்களைப்பரிமாறிக்கொள்ளும் ஒரு புதிய தொழில்நுட்பமாகும். இந்த வீடியோ கான்பரன்சிங் மூலம் தமிழகத்தில் உள்ள 14 வேளாண் அறிவியல் நிலையங்கள், 34 வேளாண் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையங்கள், கல்லூரிகள் என 60 மையங்களும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதன்வழியாக பணியாளர்கள் அந்தந்த மையங்கள் மூலமாக தொடர்பு கொண்டு தங்களுக்கு எழும் அறிவியல்பூர்வமான சந்தேகங்களைப் பகிர்ந்துகொள்ளலாம். http://vcon. tnau.ac.in என்ற இணையதள முகவரிக்குச் சென்று வீடியோ கான்பரன்சிங் பக்கத்திற்கு செல்லலாம்.

வேளாண்மை, கால்நடை வளர்ப்பிற்கான வல்லுநர் அமைப்பு: குறிப்பிட்ட பயிர் பற்றிய அனைத்து விபரங்களும் முழுத்தகவல் அமைப்பு, உடனடித் தீர்வு தரும் அமைப்பு (ஆலோசகர்), பிரச்னைகளைக் கண்டறியும் அமைப்பு (டாக்டர்) என்ற விதமாகத் தரப்பட்டுள்ளன.

பிரச்னைகளைக் கண்டறியும் அமைப்பு (டாக்டர்): இதில் பயிரைத்தாக்கும் பூச்சி, நோய்களின் அறிகுறிகளும் சத்துப் பற்றாக்குறை அறிகுறிகளும் பற்றிய நேரடி புகைப்படங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. புகைப்படங்களைப் பார்த்து முதல்நிலை, இரண்டாம் நிலை அறிகுறிகள் தேர்வு செய்யப்பட்டு பிரச்னை எதன் காரணமாக ஏற்படுகிறது? அதற்கான மேலாண்மை முறைகள், ஒற்றைச் சாளர முறையிலேயே கிடைக்கும் வகையில் இந்த மென்பொருள் வடிமைக்கப்பட்டுள்ளது. (தகவல்: முனைவர் அ.பொன்னுச்சாமி, முனைவர் அ.ஆனந்தராஜா, முனைவர் டி.மனோகரன், முனைவர் ஹெ.பிலிப், விரிவாக்கக் கல்வி இயக்ககம், த.வே.ப.கழகம், கோயம்புத்தூர்-641 003. போன்: 0422-661 1383)

அறிமுகம் நஞ்சக்கு அண்ட் செக்யூரிட்டி களைக்கொல்லிகள் பருத்தியில் அகன்ற இலை களைகளைக் கட்டுப்படுத்தும் புதிய தலைமுறை களைக்கொல்லி 'நஞ்சக்கு'. இதன் மூலக்கூறு 'பைரிதயோபெக் சோடியம் 10 இசி' பரிந்துரை - ஒரு ஏக்கருக்கு 250 மிலி, 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கை ஸ்பிரேயர் மூலம் தெளிக்க வேண்டும்.

நஞ்சக்குவை களைகள் 2 இலை நிலையில் இருக்கும்போது தெளித்தால் அமராந்தஸ் போன்ற கீரைவகை களைகளும் இதர அகன்ற இலை களைகளும் கட்டுப்படும். ஊடுபயிர் ஏதாவது இருந்தால் அழிந்துவிடும். பருத்தி பயிரை மட்டும் நஞ்சக்கு அழிக்காது.

தண்ணீர் கட்டிய உடன் நஞ்சக்கு தெளிக்க வேண்டும். நிலத்தில் ஈரப்பதம் அவசியம். ஃபிளாட்ஃபேன் நாஸிலை பயன்படுத்த வேண்டும்.

நஞ்சக்கு தெளித்தவுடன் நான்கு நாட்களில் இலைகள் மஞ்சள் நிறமாக மாறும். 10-15 நாட்களில் 100 சதம் களைகள் அழிக்கப்படுகின்றன. சாதாரண மற்றும் கீரைவகைக் களைகளைக் கட்டுப்படுத்த முடியும்.

'செக்யூரிட்டி' (இமாஸதபைர் 10 சதம் எஸ்எல்) - பாசிப்பயறு மற்றும் உளுந்து போன்ற பயிர்களுக்கு பயன்படுத்தலாம். பயிர்களை அழிப்பதில்லை. அகன்றஇலை களைகளை மட்டும் அழிக்கவல்லது.

250மிலி/ஏக்கர் என்ற அளவில் 150 லிட்டர் தண்ணீரில் கலந்து நிலத்தில் ஈரப்பதம் இருக்கும்போது தெளிக்க வேண்டும். ஊடுபயிர்கள் எதுவும் இருக்கக்கூடாது.களை முளைத்தபிறகு 4 இலை வளர்ச்சி நிலையில் இருக்கும்போது 'செக்யூரிட்டி' தெளிக்க வேண்டும். சாரணை மற்றும் கீரை வகைக் களைகளை அழித்துவிடும்.

மேலும் விபரங்களுக்கு: ராஜா, கே.எம்.டெவலப்மென்ட் எக்ஸிக்யூட்டிவ், பயோஸ்டாட், 98407 86785.

-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.






      Dinamalar
      Follow us