sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

பருத்தியில் மாவுப்பூச்சி

/

பருத்தியில் மாவுப்பூச்சி

பருத்தியில் மாவுப்பூச்சி

பருத்தியில் மாவுப்பூச்சி


PUBLISHED ON : அக் 30, 2013

Google News

PUBLISHED ON : அக் 30, 2013


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பருத்திப் பயிரில் எறும்புகள் நடமாட்டம் இருக்கிறதா? அப்படியென்றால் மாவுப்பூச்சி தாக்குதல் இருக்கிறதென தெரிந்து கொள்ளலாம்.

பருத்தியில் மாவுப்பூச்சி தாக்குதல், ஆரம்பத்தில் இங்குமங்குமாக ஒரு சில செடிகளில் மட்டும் காணப்படும். நுனிக்குருத்து, இலைகள், காய்களில் இப்பூச்சி தோன்றி, சாறை உறிஞ்சும். செடிகள் மஞ்சள் நிறமாக மாறி, வாடி காய்ந்து விடும். சில சமயங்களில் இலைகள் காய்ந்து, உதிர்ந்து விடும். இவை, கூட்டமாக பஞ்சு போல் அடையாக, இலை மற்றும் தண்டுகளில் ஒட்டிக் கொண்டிருக்கும்.

பரவும் விதம்:

மாவுப்பூச்சிகள் வெளியேற்றும் தேன் போன்ற துளிகள், இலைகளில் படிந்து பளபளவென்று மின்னும். இத்துளிகளை சாப்பிட வரும் எறும்புகள், மாவுப்பூச்சியின் குஞ்சுகளை அடுத்த செடிகளுக்கு எடுத்துச் சென்று பரப்பிவிடும். அறுவடையின் போது, உடைகளில் ஒட்டி, வயலின் பிற பகுதிகளுக்குப் பரவுகின்றன. அறுவடை முடிந்த பின் அகற்றப்படாத கத்தரி, பருத்தி, வெண்டை செடிகள் இருந்தால், அவற்றில் பூச்சிகள் பெருகி, காற்று மற்றும் மனிதர்கள் மூலம் அருகிலுள்ள பயிர்களுக்குப் பரவுகின்றன.

பருத்தியைத் தவிர வெண்டை, புடலை, கோவை, செம்பருத்தி, புகையிலை, வாழை, கொய்யா, சீத்தாப்பழம் பயிர்களிலும், குரோட்டன்ஸ், நாயுருவி செடிகளிலும் காணப்படுகின்றன. வயலைச் சுற்றிலும் நன்கு உயரமாக வளரக்கூடிய சோளப்பயிரை, நெருக்கமாக வேலி போல் பயிரிட்டால், அரண் போலிருந்து, காற்று மூலம் மாவுப்பூச்சிகள் பரவுவது தடுக்கப்படும்.

மக்காச்சோளம், தட்டை பயறு வகைகளை வாய்க்கால் வரப்புகளில் ஆங்காங்கு பயிரிட்டால், கிரைசோபா, பொறிவண்டு போன்ற நன்மை தரும் பூச்சிகள் பெருகி, மாவுப்பூச்சிகளின் பல்வேறு பருவங்களைக் கட்டுப்படுத்துகின்றன. காற்று மூலம் பரவும் மாவுப்பூச்சிகளை கண்காணிக்க, மஞ்சள் நிறம் பூசப்பட்ட டப்பாக்களில் விளக்கெண்ணெய் தடவி ஏக்கருக்கு ஐந்து டப்பாக்களை, குச்சியில் கவிழ்த்து வைக்க வேண்டும்.

தாக்குதல் குறைவாக இருக்கும் போது, வேப்பெண்ணெய் 2 சதவீதம் அல்லது வேப்பங்கொட்டைச் சாறு 5 சதவீதம் அல்லது மீன்எண்ணெய் ரோசின் சோப் 25 கிராமை, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இதைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் தண்ணீருக்கு 'ப்ரோபினோபாஸ்' அல்லது 'டைமித்தோயேட்' மருந்தை, 2 மில்லி வீதம் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு பயிர் நனையும் படி தெளிக்க வேண்டும்.

மருந்துக் கரைசல் பயிரின் பாகங்களில் படிந்துள்ள மாவுப்பூச்சி படலத்தில் நன்கு பரவும் வகையில், வேளாண் திரவ சோப்பு (சாண்டோவிட், இன்ட்ரான், ஸ்டிக்கால், தனுவெட்) ஏதாவது ஒன்றை, கால் மில்லி வீதம், ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 10 - 15 நாட்களுக்கு ஒருமுறை மீண்டும் மருந்து தெளிக்க வேண்டும்.

கைத்தெளிப்பானைக் கொண்டு தெளிக்க, ஏக்கருக்கு 200 முதல் 400 லிட்டர் வரை மருந்து கரைசல் தேவைப்படும்.

-பி.அமலா,

ஸ்ரீவில்லிபுத்தூர்.






      Dinamalar
      Follow us