sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

மழைநீர் மேலாண்மை

/

மழைநீர் மேலாண்மை

மழைநீர் மேலாண்மை

மழைநீர் மேலாண்மை


PUBLISHED ON : அக் 30, 2013

Google News

PUBLISHED ON : அக் 30, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறியதும், பெரியதுமாய் எழுப்பப்படும் அணைகள் எடுக்கப்படும் குழிகள் மழைநீரை மண்ணுக்குள் இறக்கும், தரைக்குமேல் நிறுத்தும், வளர்க்கப்படும் மரங்கள் நீர் ஆவியாக மாறுவதை தடுக்கும், மரம் உதிர்க்கும் இலைகள் நீர்ப்பிடிப்பைக் கூட்டும். இதற்கு தோட்டத்தில் சம உயரங்களை கண்டறிவது அடிப்படைத்தேவை. சம உயரங்களை கண்டறிவதற்கு நாம் பயன்படுத்தும் கருவி முக்கழிச்சட்டம்.

முக்கழிச்சட்டம் தயாரிப்பு:

தேவையான பொருட்கள்: நான்கு மீட்டர் நூல் கயிறு, இரண்டு மீட்டர் நீளமுள்ள மூன்று கழிகள் குச்சி, கோலை (குச்சி) நறுக்கக்கூடிய கத்தி, அரை கிலோ எடையுள்ள ஒரு கல் (கருங்கல் அல்லது செங்கல்)

முக்கழிச்சட்ட மாதிரி படம்: மூன்று கழிகளையும் ஆங்கில முதல் எழுத்து வடிவம் கொண்ட 'ஏ' வடிவத்தில் தரை யில் பரப்பி, எழுத்தின் தலைப்பில் உள்ள இரண்டு குச்சிகளையும் கயிற்றால் கட்டவும். எழுத்தின் கீழே குறுக்காக உள்ள கழி இரண்டு கால்களின் ஒரே உயரத்தில் இருக்குமாறு வைக்க வேண்டும். கால்களோடு குறுக்கு கழியை இரண்டு பக்கமும் கயிற்றால் கட்டவேண்டும். எழுத்தின் மேல் முனையில் ஒரு நீள கயிற்றை கட்ட வேண்டும்.

இவ்வாறு எழுத்தை எழுப்பி நிமிர்த்தினால் நடுவில் இருக்கும் கயிறானது குறுக்கு கழிக்கு கீழே தொங்க வேண்டும். கயிற்றின் நுனியில் எடுத்து வைத்திருக்கும் கல்லை கட்டி முடிச்சு போடவேண்டும். கயிறு தொய்வில்லாமல் நேராக தொங்குவதற்காக கயிற்று நுனியில் அடையாளம் செய்ய வேண்டும். பிறகு முக்கழிச்சட்டத்தின் இரண்டு கால்களும் மற்ற கால்கள் இடத்தில் நிற்கும்படி திருப்பி நிறுத்த வேண்டும். இப்பொழுது கயிறு கழியை தொடும் இடத்தை குறித்துக்கொள்ள வேண்டும். இரண்டு குறிகளுக்கும் இடைப்பட்ட புள்ளியே மையமாகும்.

அந்த இடத்தை ஆழமாக கத்தியால் கீறி அதை சுற்றி நூலால் கட்டி அடையாளத்தை தெளிவாக்க வேண்டும். இப்பொழுது முக்கழிச்சட்டம் தயாராகிவிட்டது. தயாரிக்கப்பட்ட முக்கழிச்சட்டத்தை பயன்படுத்தும் முறையை பார்ப்போம்.

சம உயர வரப்புகள் அமைக்கும்போது பணியை சரிவின் உயரமான இடத்தில் இருந்து தொடங்க வேண்டும். சரிவின் குறுக்காக முக்கழிச்சட்டத்தை நிறுத்த வேண்டும். கயிறு குறுக்குச் சட்டத்தின் மையத்தை தொடுகிறதா என பார்க்கவும். அது தொடும் வரை ஒரு காலை மட்டும் நகர்த்திக் கொண்டிருக்கவும். பிறகு இரண்டுகால்களும் நிற்கும்இடத்தில் அடையாளங்களை வைக்க வேண்டும். இப்பொழுது ஒரு காலை அசையாமல் வைத்துக்கொள்ளவும். ஒரு காலை மட்டும் பிடித்தபடி சட்டத்தை திருப்பவும். இப்பொழுது ஒரு கால் புதிய நிலப்பரப்பில் நிற்கிறது. மீண்டும் கயிற்றை குறுக்கு கழியின் நடு மட்டத்தை தொடுகிறதா என்றுகவனிக்கவும். தொடும் வரை கழியை நகர்த்தவும். கயிறு மையப்புள்ளியை தொட்டபிறகு கால் புதிதாக வைக்கப்பட்ட இடத்தில் மேலும் ஒரு அடையாளம் வைக்கவும். அடையாளம் வைக்கப்பட்ட மூன்று கழிகளையும் கற்களை அடுக்கியோ, மண்வெட்டியால் கொத்தியோ அடையாளம் செய்யவும். மேலே சொன்னதைப்போல் சம உயரங்களை குறித்துக்கொள்ளவும். சமஉயரம் வராதபோது பத்தடி தள்ளி வைத்து மீண்டும் வேலையை தொடங்கவும்.

சம உயர வரப்பு அமைத்தல்: சம உயர புள்ளிகளை இணைத்தபிறகு அவைகளைத் தொட்டபடி கோடு கிழிக்கவும். கோட்டின்மீது மண்வெட்டி பதியும்படி கொத்திமண்ணை எடுத்து வரப்பு அமைக்கவும். பள்ளம் முன்னதாகவும் வரப்பு பின்னதாகவும் அமைக்கவும். இதுவே சம உயர வரப்பு.

சம உயரங்களை அடையாளம் கண்டுகொண்டபிறகு அவற்றை இணைத்து பள்ளம் எடுத்து வரப்பு அமைப்பதை சம உயர வரப்பு என்று கூறுகிறோம். வரப்புக்கு முன் உள்ள பள்ளத்தை சற்றே அகலமாகவும் சற்றே ஆழமாகவும் தோண்டி மண் கொண்டு கரையை அகலப்படுத்தினால் சம உயர வாய்க்கால் அமையும். சரிவுகளில் பாய்ந்து தோட்டத்தை மிக விரைவாக கடக்கும் தண்ணீரை பரவலாக பாசனத்திற்கு கொண்டு செல்வது சம உயர கால்வாய்.இதனால் பெருமழை பெய்து வெள்ளப்பெருக்கு எடுக்கும் காலங்களில் மண் அரிப்பை தடுத்து நிறுத்துவதன் மூலம் வளம்மிக்க மேல் மண் பண்ணையை விட்டு வெளியேறுவது தடுத்து நிறுத்தப்படுவதுடன் மழைநீரை பண்ணைகளில் சேமிக்கலாம்.

ஆர்.பாலசுப்பிரமணியன், மதுரை.

97902 64071.






      Dinamalar
      Follow us