/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
வாத்துக்கு தீவனம் அளிப்பது எப்படி?
/
வாத்துக்கு தீவனம் அளிப்பது எப்படி?
PUBLISHED ON : டிச 04, 2024

வாத்துகளுக்கு தீவனம் அளிப்பது குறித்து, காஞ்சி புரம் மாவட்டம் ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் கே.பிரேமவல்லி கூறியதாவது:
விவசாயத்திற்கு அடுத்தபடியாக, ஆடு, மாடு, வாத்து, கோழி ஆகிய கால்நடை வளர்ப்பு தொழில் பிரதானமாக உள்ளன.
மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்று, வாத்து வளர்ப்பது மற்றும் நீர்நிலைகளை அமைத்து வாத்து வளர்ப்பது என, இரு விதமாக வாத்து வளர்ப்பு உள்ளது.
பண்ணைகள் அமைத்து வாத்துகள் வளர்க்கும் முறை கடைபிடிப்பது விவசாயிகள் இடையே குறைவு தான். கோழிகளுக்கு பண்ணைகள் இருப்பது போல, வாத்துகளுக்கு பண்ணைகள் அமைத்து, வாத்து வளர்ப்பில் ஈடுபடலாம்.
குறிப்பாக, பரண் மீது ஆடு, கோழி வளர்க்கும் போது, அதன் அடிப்பகுதிகளில் பண்ணை குட்டைகள் அமைத்து, வாத்து வளர்ப்பில் ஈடுபடலாம். இதுதவிர, பண்ணை குட்டைகளில் அசோலா தீவனம் வளர்த்து, வாத்துகளுக்கு தீவனமாக அளிக்கலாம்.
ஆடு, மாடு, கோழிகளுக்கு தீவனம் வழங்குவதை போல இல்லாமல், வாத்து அலகு என, அழைக்கப்படும் வாய் மூழ்கும் அளவிற்குதீவனத்தை தண்ணீரில் கலந்து கொடுக்க வேண்டும்.
அப்போதுதான், தண்ணீருடன் தீவனத்தையும்சாப்பிடும். அதற்குகேற்ப, கட்டமைப்புகளை வாத்து வளர்ப்பு பண்ணை விவசாயிகள் உருவாக்கிக்கொள்ளவேண்டும்.
இதன் வாயிலாக, வாத்து வளர்ப்பில் வளமான வருவாய் பெற முடியும்.
இவ்வாறு அவர்கூறினார்.
தொடர்புக்கு: முனைவர்கே.பிரேமவல்லி,
97907 53594