/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
மாடித்தோட்ட பயிராக சேலம் பெங்களூரா
/
மாடித்தோட்ட பயிராக சேலம் பெங்களூரா
PUBLISHED ON : டிச 04, 2024

சேலம் பெங்களூரா மாம்பழம் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம் கரும்பூர் கிராமத்தைச்சேர்ந்த செடிகள் உற்பத்தி செய்யும் முன்னோடி விவசாயி கே.சசிகலா கூறியதாவது:
நம்மூர் கோடை வெயில் மற்றும் மழைக்கு ஏற்றவாறு, குளிர் மற்றும் வறட்சியான பிரதேசங்களில் விளையும், பலவித பழங்கள் மற்றும் காய் மரங்களை சாகுபடி செய்யலாம்.
அந்தவரிசையில், சேலம் பெங்களூரா மாம்பழம் சாகுபடி செய்துள்ளேன். இந்த மா மரத்தின் பள்ளத்தில், தொழு உரம், வேப்பம்புண்ணாக்கு, சாம்பல் கலவை உள்ளிட்டவை அடியுரமாக போட்டு நட்டுள்ளேன். நம்ம ஊரு மண்ணுக்கு ஊட்டமாக வளர்கிறது.
பொதுவாக, பெங்களூரா ரக மாம்பழம் என்றாலே, பிற மாம்பழங்களைக் காட்டிலும் சற்று நீளமாக இருக்கும் என, நினைப்பது உண்டு. இந்த ரகத்தில் இருக்கும் பழங்களை, பெரும்பாலானோர் சாப்பிட விரும்புவதில்லை.
இந்த சேலம் பெங்களூரா ரக மாம்பழம், நடுத்தர குட்டையாவும், நுனிப்பகுதியில் கிளி மூக்கு போல கூர்மையாகவும் இருக்கும். பழத்தின் சுவையும் கூடுதலாக இருக்கும்.
மாடித்தோட்டம் மற்றும் விளை நிலங்களிலும் சேலம் பெங்களூரா ரக மாம்பழம் சாகுபடி செய்யலாம். இதன் வாயிலாக, கணிசமான வருவாய் ஈட்ட வழி வகுக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: கே.சசிகலா
72005 14168