sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

இமாம்பசந்த் தரும்... இனிப்பான் லாபம்...

/

இமாம்பசந்த் தரும்... இனிப்பான் லாபம்...

இமாம்பசந்த் தரும்... இனிப்பான் லாபம்...

இமாம்பசந்த் தரும்... இனிப்பான் லாபம்...


PUBLISHED ON : ஜூன் 08, 2016

Google News

PUBLISHED ON : ஜூன் 08, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல ரகங்களை கொண்ட மாங்கனிகளில் இமாம்பசந்த், சேலம் பெங்களூரா, மல்லிகா, பங்கனப்பள்ளி, காதர் (அல்போன்சா வகையை சார்ந்தது) ரகங்கள் முக்கிய இடம் பிடிக்கின்றன.

திண்டுக்கல் மாவட்டம்- சிலுவத்தூர் ரோட்டில் உள்ள கம்பிளியம்பட்டியில், இவ் வகை பழங்களை இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகிறார் விவசாயி துரைபாண்டியன்.

இயற்கை விவசாயத்தில் அலாதி பிரியம் கொண்ட இவர், 12 ஆண்டு களாக 24 ஏக்கர் நிலத்தை பண்படுத்தி மாமரங்களுக்கு ஏற்ற நீர்தேங்கும் கரைகளை (15 அல்லது 20 மரங்களை அடக்கிய மண்ணாலான பாத்திகள்) கட்டியுள்ளார்.

இதனால் மழைநீர் வெளியில் செல்லாமல் தடுக்கப்படுவதுடன், மண்ணின் சத்துக்கள் அங்கேயே தேங்கி நின்று பலன் தருகின்றன. ஒவ்வொரு மரத்திற்கும் கிடைக்க வேண்டிய இயற்கையான நீர்ச்சத்து, நுண்ணூட்ட சத்து, இலை தழைகள் மூலம் கிடைக்கும் பசுந்தாழ் இயற்கை உரங்கள் மரங்களுக்கு கிடைக்கிறது.

'இமாம்பசந்த்' ரக மா மரங்கள் 16 ஏக்கரில் 800 மரங்கள், மீதி 8 ஏக்கரில் சேலம் பெங்களூரா 150 மரங்கள், மல்லிகா 50 மரங்கள், பங்கனப்பள்ளி 50 மரங்கள், காதர் (அல்போன்சா சிறப்பு வகை) 50 மரங்கள் நடப்பட்டுள்ளன. இந்தாண்டு சீசனில் 8 டன் இமாம்பசந்த் மாம்பழங்கள் கிடைத்துள்ளன. முழுக்க முழுக்க இயற்கை முறையில் விளைந்ததால் மாம்பழ பிரியர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. தற்போதைய விலை கிலோ ரூ.120.

துரைபாண்டியன் கூறியதாவது: இமாம்பசந்த் மரக்கன்றுகளை 2 அடிக்கு 2 அடி அளவில் நட்டு, மூன்றாண்டு பராமரித்தேன். பின் மற்ற ரகங்கள் (1,100 கன்றுகள்) ரூ.1.75 லட்சத்தில் சொட்டு நீர்ப்பாசனம் அமைத்து நடவு செய்தேன். துளிர்விட்ட களைகளை அந்தந்த மரங்களின் அடியிலேயே உழுது உரமாக்கினேன். ஐந்து ஆண்டுகள் கழித்து 20 மரங்களுக்கு நடுவில் கரை கட்டி பராமரித்தேன். இதனால் மழைநீர் மரத்திற்கு சேர்ந்தது. கரை கட்டிய பின் மரங்களின் வளர்ச்சியில் மிகப்பெரிய மாற்றம் வந்தது. 12வது ஆண்டு முடிவில் அனைத்து மரங்களும் மிக அதிகளவில் காய்த்தது.

இயற்கை முறை வளர்ப்பு என்பதால், பூஞ்சை தாக்குதல் இருந்தது. அதனால் கோவை வேளாண் பல்கலை பரிந்துரைத்த இயற்கை நுண்ணுயிர் கரைசல் தெளித்தோம். இதனால் பூஞ்சை குறைந்து மரங்களின் அடர்த்தி அதிகமானது. கடந்த 3 ஆண்டுகளில் தட்பவெப்ப நிலை சரியில்லை என்றாலும், விளைச்சல் சீராகவே இருந்தது. 16 ஏக்கரில் 8 டன் இமாம்பசந்த் கிடைத்துள்ளது. அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர் விளைச்சல் இருக்கும். இதனால் செலவு போக ரூ.50 ஆயிரம் கிடைத்தது என்றார். தொடர்புக்கு 98421 51615.

- வீ.ஜெ.சுரேஷ், திண்டுக்கல்.






      Dinamalar
      Follow us