/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
பிரதமரின் 'முத்ரா' தொழில் கடனுதவி திட்டம்
/
பிரதமரின் 'முத்ரா' தொழில் கடனுதவி திட்டம்
PUBLISHED ON : ஜூன் 01, 2016
இந்திய அரசு தொழிலுக்கும், விவசாயத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு கடன்கள், மானியங்கள், உதவிகள் செய்து வருகிறது. அவ்வகையில் பிரதமரின் 'முத்ரா யோஜனா' (மைக்ரோ யூனிட்ஸ் டெவலப்மென்ட் அண்ட் ரீபைனான்ஸ் ஏஜன்சி) எனும் திட்டம் சிறு, குறுந்தொழில் செய்வோருக்கு தேவையான கடன் சரியான நேரத்தில் கிடைக்க வகை செய்கிறது. இதற்காக மூன்று திட்டங்களை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
* சிசு திட்டம்: சிறு தொழில் வியாபாரத்திற்கு ரூ.50 ஆயிரம் வரை கடன்.
* கிஷோர் திட்டம்: ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை கடன்.
* தருண் திட்டம்: ரூ.5 முதல் ரூ.10 லட்சம் வரை சிறந்த தேவையான திட்டங்களுக்கு கடன் பெற முடியும்.
சிறிய தொழில்களுக்கு உதவ, அவர்களை பதிவு செய்ய ஏழை, எளிய மக்கள் முன்னேற, விவசாயிகள், சிறு வியாபாரிகள் தனியாரிடம் கடன் பெற்று கஷ்டப்படுவதை தடுக்க எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவுக்கு முன்னுரிமை தர இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
சிறு ஓட்டல், விவசாய இயந்திரங்கள், சலுான் முதல் ரிப்பேரிங் கடை வரை கடன் பெறலாம். அனைத்து அரசு, தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், கிராம வங்கிகள் இக்கடன் பெறலாம். கடன் பெற ரேஷன் கார்டு அல்லது ஆதார் அடையாள அட்டை, இரு புகைப்படம், மிஷினரி கொட்டேஷன், லைசென்ஸ், சான்றிதழ், ஜாதி சான்று கொண்டு செல்ல வேண்டும். புதிய காப்பீட்டு திட்டங்களிலும் சேர முடியும்.
www.mudra.gov.in. தொடர்புக்கு 1800 11 0001.