sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

மலைத்தோட்ட பயிர்களின் மகத்துவம்

/

மலைத்தோட்ட பயிர்களின் மகத்துவம்

மலைத்தோட்ட பயிர்களின் மகத்துவம்

மலைத்தோட்ட பயிர்களின் மகத்துவம்


PUBLISHED ON : ஜூன் 01, 2016

Google News

PUBLISHED ON : ஜூன் 01, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்தியாவில் பல்வேறு பயிர்கள் சாகுபடிக்கு உகந்த பருவநிலை நிலவினாலும், அதிகளவு வருமானம் பார்த்திட உதவும் முக்கியப் பயிர்கள் வரிசையில் மலைத்தோட்டப் பயிர்கள் முதலிடம் வகிக்கின்றன. இந்த வகையில் தென்னை, முந்திரி, காபி, தேயிலை, ரப்பர்,

வெற்றிலை, பாக்கு, கொக்கோ முதலிய பயிர்கள் பல உள்ளன.

நம் நாட்டில் கிட்டத்தட்ட 3,900 ஏக்கர் பரப்பில் 6,200 மெட்ரிக் டன் உற்பத்தி ஆகிறது. ஒவ்வொரு மலைத்தோட்டப் பயிர் சாகுபடிக்கும் தனியே வளர்ச்சி வாரியம் மற்றும் ஆராய்ச்சி திட்டங்கள் உள்ளன. இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் ஏதாவது ஒரு மலைத்தோட்டப் பயிர் சாகுபடி வளர உகந்த சூழல் உள்ளது. உறுதியாக பயிர் திட்டத்தில் இவற்றை சேர்த்து முறையாக திட்டமிட்டு சேர்ந்து வளர்த்தால் நீடித்த லாபம் பெறலாம்.

நீர் வசதி இருப்பின் இந்தப் பயிர்களில் பல மடங்கு லாபம் எடுத்தல் எளிது. மண்வளமாக இருப்பின் இன்னும் நல் வாய்ப்பு. பருமழை தவறாது பெய்து, போதிய வேலை ஆட்கள் கிடைத்தால், இந்த பயிர்களில் மதிப்புக்கூட்டியும் பலவகை வருமான வாய்ப்புகளை உருவாக்கலாம்.

இந்திய ஏற்றுமதியில் இந்த பயிர்கள் தனி இடம் பிடித்துள்ளதால், இவற்றை விதைப்பு முதல் அறுவடை வரை இயற்கை வேளாண் முறைகள் கையாண்டால் தரமான விளைபொருள் கிடைப்பது உறுதி. அதற்கு விலையும் பல மடங்கு உள்ளது.

பரவலாக இவற்றை பற்றி பெரும்பாலானோர் கருத்து பரிமாறி கொள்ளாததால் பலவகை உத்திகள் இந்த பயிர் சாகுபடியாளர்களால் கடைப்பிடிக்கப்படவில்லை. அதிக நிலப் பரப்பு சிலரிடம் உள்ளதால், அந்தந்த பரப்புக்கு மூலதனமாக முதலீடு செய்ய தயாராக

இல்லாமல் உள்ள விவசாயிகள் நல்ல விழிப்புணர்வு பெற வேண்டும்.

குறிப்பாக தென்னையில் வயதுக்கு ஏற்ப மண்வளம், நீர் ஆதாரத்துக்கு ஏற்ப ஆண்டுப் பயிர்கள், பல்லாண்டு பயிர்கள் என முறையாக தேர்வு செய்து நட கிட்டத்தட்ட 60 பயிர்கள் உள்ளன. இதே போல் காபி, முந்திரி முதலிய இணைப் பயிர்கள் பலவற்றுடன் லாபம் பார்க்க உதவுபவை.

ஊடுபயிர் எந்தப் பயிர் நல்ல நிலம் மேம்பாட்டுக்கும், முக்கிய பயிர் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்பதை தொழில்நுட்ப ஆலோசனை பெற்று ஒரு ஏக்கரில் சுமார் ரூ.5 லட்சம் வரை முறையான பயிர் தேர்வு மூலம் வரவு பெறலாம். இதற்கு உரிய உத்திகள் பல உள்ளன.

- பா.இளங்கோவன், விவசாய ஆலோசகர்

பாப்பநாயக்கன்புதூர், கோவை,

அலைபேசி 98420 07125






      Dinamalar
      Follow us