sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

நெற்பயிரை தாக்கும் பூச்சிகள்

/

நெற்பயிரை தாக்கும் பூச்சிகள்

நெற்பயிரை தாக்கும் பூச்சிகள்

நெற்பயிரை தாக்கும் பூச்சிகள்


PUBLISHED ON : ஜூலை 03, 2013

Google News

PUBLISHED ON : ஜூலை 03, 2013


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இலைப்பேன்: இப்பூச்சியானது இளம் வயதில் அதாவது நாற்றங் காலில் ஆரம்பமாகும். இப்பூச்சி வந்தபிறகு நாற்றங்கால் வெளிறிய மஞ்சள் நிறமாகி தீய்ந்ததுபோல் காணப்படும். இலைகள் நுனியிலிருந்து காய்ந்து சுருண்டுவிடும். நடவு வயலில் இலையில் சாம்பல் படர்ந்தது போல் காணப்படும். இப்பூச்சி வெப்பகாலங்களில் அதிகமாக காணப்படும்.

இப்பூச்சியை கட்டுப்படுத்த வேப்பங் கொட்டைச்சாறு 5 சதம் அல்லது வேப்பெண்ணெய் 3சதம் தெளிப்பதன் மூலம் இப்பூச்சியைக் கட்டுப்படுத்தலாம். பாஸ்போமிடான் 40 எஸ்.எஸ். 2.5 மிலி/லிட்டர் என்ற முறையில் தெளிப்பதன் மூலம் இப்பூச்சியைக் கட்டுப்படுத்தலாம்.

பச்சை தத்துப்பூச்சி: இப்பூச்சி யானது நடவுசெய்த இளம் பயிர் களையே பொதுவாக ஜூலை முதல் செப்டம்பர் வரை தாக்கும். தூர்கள் வளர்ச்சி குன்றி, பசுமை யிழந்து பழுப்பேறி நாளடைவில் காய்ந்துபோகும். மேலும் நெல்லில் துங்ரோ நச்சுயிரி நோய் (துங்ரோ வைரஸ் நோய்) இப்பூச்சிகளால் பரப்பப்படுகிறது.

இப்பூச்சியைக் கட்டுப்படுத்த வேப்பங்கொட்டை சாறு 6 சதம் அல்லது வேப்பெண்ணெய் 3 சதம் தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம். அசிபேட் 75 எஸ்.பி. 2 கிராம்/ லிட்டர் அல்லது தயோமீத்தாக்சம் 25 டபிள்யூ டிஜி 0.2 கிராம்/லிட்டர் என்ற விகிதத்தில் தெளிப்பதன் மூலம் இப்பூச்சியை கட்டுப்படுத்தலாம்.

தண்டு துளைப்பான்: இப்பூச்சியானது இரண்டு பருவங்களில் வருகின்றது. 1. இளம் பருவம் 2. பூ பூக்கும் பருவம். இளம் பருவத்தில் இப்பூச்சி தாக்கும் போது நடு குருத்து காய்ந்துவிடும். பிடித்து இழுத்தால் கையோடு வந்து விடும். பூ பூக்கும் பருவத்தில் தாக்கும்போது பூக்கள் வெள்ளையாக வெளியே வரும். இப்பூவை இழுத்தால் கையோடு வந்துவிடும். இப்பூச்சி யின் புழுக்கள் பயிரின் கீழேயுள்ள 2வது, 3வது கணுக்களில் புழு நுழைந்த துவாரம் காணப்படும். மேலும் இப்பூச்சியானது டிசம்பர், ஜனவரி மாதங்களில் அதிகமாக இருக்கும்.

ட்ரைக்கோகிரம்மா ஜப்பானிக்கம் முட்டை ஒட்டுண்ணியை நடவுசெய்த 30 மற்றும் 37ம் நாட்களில் ஏக்கருக்கும் 2 சிசி வீதம் வெளியிட்டு இப்பூச்சியை கட்டுப்படுத்தலாம். புரோபனால் 50 இசி 2 மிலி/ லிட்டர் அல்லது குயினால்பாஸ் 25 இசி 2 மிலி/லிட்டர் என்ற விகிதத்தில் தெளிப்பதன் மூலம் இப்பூச்சியை கட்டுப்படுத்தலாம்.

இலைச்சுருட்டுப்புழு: இப்புழுவானது இலைகளை நீளவாக்கில் சுருட்டிக் கொண்டு பச்சை நிறத்தில் காணப்படும். இப்புழு இலையின் பச்சையத்தைச் சுரண்டி உண்பதால் இலைகள் வெண்மையாக சருகுபோல் மாறும்.

முட்டை குவியல்களையும், கூண்டுப் புழுக்களையும் எடுத்து அழிக்க வேண்டும். டிரைக்கோகி ரம்மா கைலோனிஸ் முட்டை ஒட்டுண்ணியை நடவு செய்த 37, 44 மற்றும் 51வது நாட்களில் ஏக்கருக்கு 2 சிசி வீதம் வெளியிட்டு இப்பூச்சியைக் கட்டுப் படுத்தலாம். இப்பூச்சிக்கு எதிரி ரகமான திருச்சி-3 ரகத்தை பயிர் செய்யலாம். பாஸ்போ மிடான் 40 எஸ்.எல்.2 மிலி/ லிட்டர் அல்லது புரேபனோபாஸ் 50இசி 2 மிலி/லிட்டர் அல்லது குளோர்பைரிபாஸ் 20 இசி 2.5 மிலி/லிட்டர் என்ற விகிதத்தில் தெளிப்பதன் மூலம் இப்பூச்சியைக் கட்டுப்படுத்தலாம்.

கதிர் நாவாய் பூச்சி: இப்பூச்சியானது கதிர் பால்பிடிக்கும் தருணத்தில் சாற்றை உறிஞ்சுவதால் மணிகள் சுருங்கி, பழுப்பு நிறமாகிவிடும். இப்பூச்சி தாக்கிய மணிகளில் கரும்புள்ளிகள் காணப்படும்.

மேலும் இப்பூச்சி தாக்கிய வயல்களில் ஒரு விதமான துர்நாற்றம் வீசும். ஒரு கதிரை எடுத்துக்கொண்டால் அதில் உள்ள அனேக மணிகள் பதராகி காணப் படும். கார்பரில் 10 சத தூள் 10 கிலோ/ ஏக்கருக்கு அல்லது மாலத்தியான் 10 சத தூள் 10 கிலோ/ஏக்கருக்கு என்ற விகிதத்தில் தெளிப்பதன் மூலம் இப்பூச்சியைக் கட்டுப்படுத்தலாம்.

சி.மகேந்திரன்,

பி.எஸ்சி(அக்ரி), எம்.பி.ஏ.,

கடலூர்.






      Dinamalar
      Follow us