sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

ஒருங்கிணைந்த பண்ணைய முறையே வளங்குன்றா வேளாண்மைக்கு உதவும்

/

ஒருங்கிணைந்த பண்ணைய முறையே வளங்குன்றா வேளாண்மைக்கு உதவும்

ஒருங்கிணைந்த பண்ணைய முறையே வளங்குன்றா வேளாண்மைக்கு உதவும்

ஒருங்கிணைந்த பண்ணைய முறையே வளங்குன்றா வேளாண்மைக்கு உதவும்


PUBLISHED ON : மார் 19, 2014

Google News

PUBLISHED ON : மார் 19, 2014


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தோட்டக்கலைப்பயிர் சாகுபடியுடன் ஒருங்கிணைந்த பண்ணைய உத்தி தான் லாபம் தரும். இதற்கு தோட்டக்கலைப்பயிர் சாகுபடியுடன் உப தொழில்களாக மண்புழு வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு, ஆடு, மாடு, முயல், பன்றி, பட்டுப்புழு, வாத்து, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, வேளாண் காடுகள், சாண எரிவாயு கலன், சூரிய ஒளி ஆதாரங்கள் பயன்பாடு மூலம் காயவைத்து விற்க உகந்த வற்றல் வகைகள் வடாம் தயாரிப்பு மற்றும் பழங்கள் மூலம் பழச்சாறு, கனிரசம், ஜாம் தயாரிப்பு, ஜெல்லி தயாரிப்பு, பண்ணைக் குட்டைகள் அமைத்தல் தீவனப்பயிர் சாகுபடி செய்தல் முதலிய ஒருங்கிணைந்த பண்ணைய உத்திகளையும் மேற்கொள்ள நிறைய வாய்ப்பு இருந்தும் ஒரு பயிர் சாகுபடி, முறையற்ற வேளாண்மை, நீர் பற்றாக்குறை பற்றி பேசி அதிக நீர்த்தேவைப்படும் உயர் விளைச்சல் தான்யப் பயிர் தேர்வு செய்து நட்டு மகசூல் இழப்பால் அவதிப்படாமல் இருக்க நிச்சயம் 'வளங்குன்றா வேளாண்மை' உத்தியைக் கையாளலாம். இயற்கை வேளாண்மை உத்தியும்

இத்தகைய உத்திகளால் எளிதில் சாத்தியாகும் அங்ககச்சான்று மூலம் உற்பத்தியாளர் அல்லது விற்பனையாளர் சான்று பெறலாம். இதன் மூலம் இயற்கை அங்காடிகளில் தனது விளை பொருட்களை விற்க வழி உள்ளது.

ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம் பாரம்பரிய முறைகளையும் நவீன உத்திகளையும் வேளாண், தோட்டக்கலை சார்பு தொழில்களை ஊக்குவிக்கும் உத்தியாகும். ஒவ்வொரு விவசாயியும் தனது நிலப்பரப்பினை இறைவன் கொடுத்த சூரிய ஒளி அறுவடை தொழிற்சாலை என கருதி நன்செய், புன்செய் மற்றும் மானாவாரி இதில் ஒருங்கிணைந்த முறைகள் கையாள இன்று அவசியம் வந்துள்ளது.

இத்தகைய உத்திகளால் தான் உயர் லாபம் ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பு, நிலையான வருமானம், நீடித்த வேளாண்மை பண்ணைக்கழிவுகள் முறையாக பயன்படுதல், தரமான விளைபொருள் தன் முயற்சி மூலம் உற்பத்தி செய்து அங்ககச் சான்று மூலம் நலமான சூழல் ஏற்படுத்தி நோயில்லா பெருவாழ்வு வாழ சமுதாயத்துக்கு உதவலாம்.

எனவே இன்றே திட்டமிட்டு செயல்படலாம் என டாக்டர் பா.இளங்கோவன், தோட்டக்கலை உதவி இயக்குனர், உடுமலை தெரிவித்தார். இவரது ஆலோசனைக்கு 98420 07125.






      Dinamalar
      Follow us