sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் தீவிர நெல் சாகுபடி

/

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் தீவிர நெல் சாகுபடி

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் தீவிர நெல் சாகுபடி

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் தீவிர நெல் சாகுபடி


PUBLISHED ON : பிப் 05, 2014

Google News

PUBLISHED ON : பிப் 05, 2014


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம், குமுளி, தேனி, பாளையம், வீரபாண்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள விவசாயிகள் ஜேசிஎல், என்எல்ஆர் 34449, ஜே13, எஎஸ்டி 16 மற்றும் கர்நாடகா பொன்னி நெல் ரகங்களை முதல் போகத்தில் சாகுபடி செய்து அறுவடை செய்து முடித்து உள்ளார்கள். விவசாயிகள் ஒரு ஏக்கரில் 60 கிலோ மூட்டை 45 மூட்டை மகசூல் எடுத்து உள்ளார்கள். ஒரு மூட்டை நெல்லின் விதை ரூ.800. ஒரு ஏக்கரில் வைக்கோலின் மதிப்பு ரூ.2,000.

விவசாயிகள் இரண்டாம் போகம் நெல் சாகுபடி செய்து நல்ல விளைச்சலில் உள்ளது. நல்ல மகசூல் வரும் என்று விவசாயிகள் எதிர்ப்பார்க்கிறார்கள். இரண்டாம் போகம் நெல் அறுவடை செய்து நல்ல மகசூல் எடுத்த பிறகு விவசாயிகள் ஜே 13, 100 நாள் நெல் ரகத்தை தேர்ந்தெடுத்து சாகுபடியை துவக்கலாம் என்று இக்கட்டுரையின் ஆசிரியர் விவசாயிகளுக்கு ஆலோசனை தெரிவிக்கிறார். ஜே 13 நெல்லிற்கு குச்சி நெல் என்ற பெயரும் உண்டு.

விவசாயிகள் ஜே 13 நெல்லினை நேரடியாக விதைத்து சாகுபடி செய்தால் நெல் ரகத்தின் வயது குறையும். உடனே நடவு நிலத்திற்கு நன்கு மக்கிய தொழு உரம் ஏக்கருக்கு நான்கு ட்ரெய்லர் லோடு இட்டு நிலத்தை உழ வேண்டும். கடைசி உழவின் போது அடி உரமாக ஏக்கருக்கு அம்மோனியம் பாஸ்பேட் இரண்டு மூட்டைகள், பொட்டாஷ் 35 கிலோ இட்டு நிலத்தை சமன் செய்ய வேண்டும். பின்னால் பிறகு நடவிற்கு முன் 10 கிலோ பொடி செய்யப்பட்ட ஆற்று மணலுடன் கலந்து வயலுக்கு இட்டு நாற்றுக்களை நட வேண்டும். நாற்றுக்களை வரிசை நடவு போட வேண்டும். வயலில் களை எடுக்கும் கருவியை பயன்படுத்த வேண்டும். களை எடுக்கும் கருவியை பயன்படுத்தினால் வேர் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

ஜே13 நெல் பயிரிட்ட வயலுக்கு முறைப்படி பாசனம் செய்ய வேண்டும். நெல் அறுவடைக்கு எட்டு நாட்கள் முன்பாக பாசனத்தை நிறுத்த வேண்டும். ஒரு ஏக்கரில் சாகுபடி செலவு உத்தேசமாக ரூ.7,000 ஆகும். ஒரு ஏக்கரில் 30 மூட்டைகள் (மூட்டை 60 கிலோ) மகசூல் எடுக்கலாம்.

நெல் விற்பனை சாகுபடி செலவு போக ரூ.5,000 லாபம் எடுக்கலாம். ஒரு ஏக்கரில் வைக்கோல் விற்பனையில் ரூ.1,000 எடுக்கலாம். நெல்லினைத் தொடர்ந்து மணிலா சாகுபடி: ஜே 13 நெல்லினை அறுவடை செய்த பிறகு விவசாயிகள் நிலத்தை நன்கு உழுது அதிலுள்ள அடித்தாள்களை அகற்ற வேண்டும். பிற அந்த மண்ணில் விஆர்ஐ 2 மணிலாவை (வயது 105 நாட்கள்) சாகுபடி செய்யலாம்.

பொருளாதாரம்: விவசாயிகள் இறவை மணிலாவை சாகுபடி செய்தால் ஒரு ஏக்கரில் தரமான காய்கள் 25 மூட்டைகள் (மூட்டை 40 கிலோ) மகசூலாக எடுக்கலாம். மணிலா மூட்டை விலை ரூ.600 என்றால் வரவு ரூ.15,000 எடுக்கலாம். செடிகளை கறவை மாடுகளுக்கு தீவனமாகவும் உபயோகிக்கலாம். இல்லையேல் செடிகளை நன்கு காயவைத்து நெல் பயிருக்கு உரமாக இடலாம். நல்ல பயன் கிடைக்கும்.

விவசாயிகள் விவசாயத்தில் அதிக அக்கறை காட்டி நல்ல லாபம் எடுப்பதோடு தனது அனுபவத்தால் இரண்டு பயிர்களை சாகுபடி செய்து பயன் அடையலாம். பல விவசாயிகள் ஜே 13 நெல் ரகம் குறைந்த வயதினைக் கொண்டதால் (100 நாட்கள்) அந்த ரகத்தை தொடர்ந்து விடாமல் சாகுபடி செய்கிறார்கள். அதே போல் மணிலாவை சாகுபடி செய்து குறுகிய காலத்தில் நல்ல லாபம் எடுக்கின்றன்றார்கள்.

- எஸ்.எஸ்.நாகராஜன்






      Dinamalar
      Follow us