sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

சின்ன சின்ன செய்திகள்

/

சின்ன சின்ன செய்திகள்

சின்ன சின்ன செய்திகள்

சின்ன சின்ன செய்திகள்


PUBLISHED ON : பிப் 05, 2014

Google News

PUBLISHED ON : பிப் 05, 2014


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல் சாகுபடி- ஊட்டச்சத்து மேலாண்மையில் புதிய உத்திகள்: தழைச்சத்து பயிர்களுக்கு அளிக்கும் போது வீணாகாமல் தடுக்கவும் நெற்பயிரின் இலைகளின் தழைச்சத்தின் அளவைக் கண்காணித்து அதனை துல்லியமாக பச்சையத்தை அளிக்கும் கருவி (குளேரோபில் மீட்டர்) மூலம் தெரிந்து தேவைப்பட்டால் மட்டுமே மேலுரமிட பரிந்துரைக்கப்படுகிறது. இந்த கருவி விலை அதிகம் என்பதாலும் எல்லா உழவர்களாலும் வாங்க இயலாது என்பதாலும், பச்சை வண்ண அட்டையைக் குறைந்த (ரூ.40) விலையில் தயார் செய்துள்ளனர். மிகவும் வெளிறிய நிறத்தையும் (எண்.1) மிகவும் அடர்ந்த பச்சை நிற பட்டையையும் (எண்.6) நீக்கி விட்டு 4 நிறப்பட்டைகளைக் கொண்ட இலை வண்ண அட்டையை உருவாக்கி உழவர்களின் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தியது, த.வே.ப.கழகம் பட்டை எண்.4ஐ உழவர்கள் தழைச்சத்து இடும் தேவையைத் தீர்மானித்து பயன்படுத்தலாம். அட்டையில் வெளறியபச்சை (எண்.2) நிறத்திலிருந்து கரும் பச்சை (எண்.5) நிறம் வரையிலான நான்கு விதமான பச்சை வண்ணப்பட்டைகள் உள்ளன.

இந்த அட்டையைப் பயன்படுத்தி நிர்ணயிக்கப்பட்ட குறியீட்டு அளவு 4க்கு கீழ் இருந்தால் குறுவைப் பயிருக்கு ஒவ்வொருமுறையும் எக்டருக்கு 35 கிலோ தழைச்சத்தும், சம்பா, தாளடி பயிருக்கு எக்டருக்கு 30 கிலோ தழைச்சத்து நட்ட 14ஆம் நாளிலிருந்து பூக்கும் தருணம் வரை இட வேண்டும். இந்த முறையில் எக்டருக்கு 20 முதல் 40 கிலோ வரை தழைச்சத்து சேர்க்கப்படுவதால் உழவருக்கு ரூ.235 - 470 உரை உரச்செலவு குறையும். இது மட்டுமல்லாமல் தழைச்சத்து தேவைக்கேற்ப இடுவதால் இச்சத்தின் பயன்பாட்டுத்திறன் அதிகரிப்பதோடு பூச்சிநோய் தாக்குதலின் அளவுக் குறையும்.

மண் ஆய்வு மேற்கொள்ளாத நிலத்திற்கு உர மேலாண்மை: நடவு வயல் மண் ஆய்வு செய்யப்படாத நிலமாக இருந்தால் பொதுவாக பரிந்துரைக்கப்படுகின்ற உர அளவை இட வேண்டும். நீண்ட கால சம்பா, மத்திய கால ரகங்களுக்கு எக்டருக்கு 150 கிலோ தழை, 50 கிலோ மணி, 50 கிலோ சாம்பல் சத்துக்களை இடவேண்டும். இதைத்தவிர எக்டருக்கு 500 கிலோ ஜிப்சம், 25 கிலோ துத்தநாக சல்பேட்டும் இடவேண்டும். இவை சுண்ணாம்பு கந்தகம், துத்தநாக சத்தை அளிக்கிறது. நடவு செய்யும் முன் எக்டருக்கு 2 கிலோ அசோஸ்பைரில்லம், 2 கிலோ பாஸ்போ பாக்டீரியா போன்ற உயிர் உரங்களை 50 கிலோ மணலுடன் கலந்து சீராகத் தூவ வேண் டும். மேலும் நடவு செய்த 7-10 நாட்களில் எக்டருக்கு 10 கிலோ நீலப்பச்சைப்பாசி, 25 கிலோ தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும்.

நானோ தொழில்நுட்பம்: அணுத்துகள்களை மாற்றங்களுக்கு உட்படுத்தி, அவற்றினை மிகச் சிறியவையாக மாற்றுவதால், அவற்றின் வீரியத்தை அதிகப்படுத்தி, அந்த தருணத்தை நமக்கு தேவையான தசைகளில் பயன்படுத்திக் கொள்ளுதலே நானோ துகள் தொழில்நுட்பம்.

தற்போதுள்ள துல்லிய விவசாயப் பண்ணைத்திட்டத்திலும் நானோ தொழில்நுட்பத்தை பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் அதிகமாக இடப்படும் இடுப்பொருட்களின் அளவினைக் குறைத்து, ஏற்கனவே கிடைப்பதை விட, அதிக அளவு மகசூலை எடுப்பதே தற்போதைய நானோவின் அடிப்படை கொள்கை. பூச்சி மருந்துகளிலும், களைக்கொல்லிகளிலும் நானோ தொழில்நுட்பம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

100-250 nm அளவுகளில், அதாவது நானோ அளவுகளில் நிறைய நிறுவனங்கள் மருந்துகளைக் கண்டறிய ஆரம்பித்துள்ளன. இவை தற்போதுள்ள துகள்களை விட, நீரில் எளிதில் கரையும் தன்மையுடையவனாய் உள்ளன.

சர்வதேச அளவில் மிகவும் பிரபலமாக உள்ள சின்ஜெண்டா 'Primo MAXX' எனப்படும் பயிர் வளர்ச்சி ஊக்கியில் நானோ எமலி'சனை பயன்படுத்தியுள்ளது. இதனைப் பயன்படுத்தினால், பயிர் வளர்ச்சிப் பருவத்தில் வறட்சியினால் ஏற்படும் சோர்வினை தவிர்த்து பயிர் செழுமையாக வளரும் என்கின்றனர்.

சின்ஜெண்டா தருவது இன்னொரு நானோ கேப்ஸ்யூல் வடிவில் உள்ள கராத்தே கீ Zeon இதுவும் உக் (யூரோப்பியன் யூனியன்)வில் தான் விநியோகப்படுத்தி, நெல், பருத்தி,சோயாவில் பூச்சிகளுக்கு எதி ராகச்செயலாற்ற கராத்தே ஜியான் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

நானோ தொழில்நுட்பத்தில் விளைச்சல் பன்மடங்கு அதிகரிக்கிறது. இலையில் பச்சயம் அதிகரிக்கிறது. இதன் விளைவால் ஒளிச்சேர்க்கை அதிகமாவதால் பூக்கள், காய்கள் மற்றும் பழங்கள் அதிகரிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: Prof. P.Rajasekaran, Chairman, Managing Director, Innovative Nano Bio Techformulation, Old No. 34/1, New No. 73/1, 7th Avenue, Ashok Nagar, Chennai 600 083.செல்: 93809 54559.

டாக்டர். கு.சௌந்தரபாண்டியன்






      Dinamalar
      Follow us