தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/மல்லிப்பூவை தாக்கும் நோய்கள்

மல்லிப்பூவை தாக்கும் நோய்கள்

மல்லிப்பூவை தாக்கும் நோய்கள்


PUBLISHED ON : அக் 18, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 18, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மல்லிகைப்பூ ஒரு வணிக உதிரி மலர். குண்டு மல்லிகைப்பூ மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், திருச்சி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, ஈரோடு, கோவை மாவட்டங்களில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. எனினும் மதுரை மல்லிகையே முதலிடம் வகிக்கிறது. இதனால் மதுரை மல்லிகைக்கு புவிசார் குறியீட்டு எண் 2013 ம் ஆண்டு வழங்கப்பட்டது. மதுரையில் திருமங்கலம், திருப்பரங்குன்றம், கள்ளிக்குடி, உசிலம்பட்டி பகுதிகளில் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. மல்லிகைப்பூ சந்தை மதுரை, நிலக்கோட்டை, தோவாளை பகுதிகளில் உள்ளது. மதுரை, கோவை, திருச்சியில் இருந்து பெருமளவு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மொட்டுப்புழு, சுருட்டுப்புழு

மல்லிகையில் மொட்டுப்புழு மற்றும் இலைச் சுருட்டுப்புழு ஆகியவை இளம் மொட்டுக்கள் மற்றும் இலைகளை தாக்கி கடும் பொருளாதார சேதத்தை ஏற்படுத்தி விடுகிறது. நோய் தாக்கிய மொட்டுக்கள் பழுப்பு நிறமாக உருமாற்றம் அடைகிறது. இவற்றை கட்டுப்படுத்த 0.2 சதம் 'மேனோகுரோட்டாபாஸ்' கரைசலை தெளிக்க வேண்டும். சிலந்திப்பூச்சி இலைகளை கடித்து சேதப்படுத்துகிறது. இதை கட்டுப்படுத்த நனையும் கந்தகத்தை 0.2 சதவிகிதம் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.

வாடல் நோயால் வாடும் பூ



வாடல் நோய் தாக்கிய கிளைகளின் அடிபக்க இலைகள் மஞ்சளாகி நுனிக்குப்பரவி செடிகள் வாடி கருகி விடுகின்றன. இதை கட்டுப்படுத்த ஒரு சதம் 'போர்டோ' கலவையை செடிகளை சுற்றி மண்ணில் ஊற்றுவதன் மூலம் வாடல் நோயை கட்டுப்படுத்தலாம் நல்ல வடிகால் நிலங்களில் குண்டுமல்லி பயிர் செய்வதால் நோய் வராமல் தடுக்கலாம். துரு நோயால்

பாதிக்கப்பட்ட செடிகளின் முற்றிய இலைகள் மஞ்சள் நிறத்துடன் ஒழுங்கற்று சுருண்டு காணப்படும். பின் தண்டுகளையும் பாதித்து கிளைகளின் பட்டை வெடித்து, இறுதியில் செடிகள் வாடி விடுகின்றன. நனையும் கந்தகத்தை எக்டருக்கு 20 முதல் 25 கிலோ என்ற அளவில் செடிகளின் மீது துாவி கட்டுப்படுத்தலாம்.

மல்லிகைப்பூ வாட்ஸ்ஆப்

பொதுவாக இலைகள் மஞ்சளாவது வேர் புழு தாக்குதல், வேர் அழுகல் மற்றும் இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படுகிறது. இவை மஞ்சளாவதை தடுக்க 'பியூரடான்' குருணைகளை செடிக்கு 5 முதல் 10 கிராம் என்ற அளவில் செடியை சுற்றிலும் இட்டு மண்ணுடன் கலந்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இரும்புச்சத்து குறைப்பாட்டை நிவர்த்தி செய்ய 'பெர்ரஸ் சல்பேட்டை' லிட்டருக்கு 20 கிராம் என்ற அளவில் கரைத்து 2 மாதங்களுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும்.

தவிர ஏக்கருக்கு ஒரு விளக்குப்பொறி வைக்க வேண்டும். மஞ்சள் நிற தகர டப்பாக்களின் மீது ஆமணக்கு எண்ணெய் தடவி பயிரின் உயரத்திற்கு குச்சிகளை நட்டு ஏக்கருக்கு 5 வைத்து, கவரப்படும் பூச்சிகளை அழிக்கலாம். டப்பாக்களை வாரத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்து எண்ணெய் தடவி வைக்க வேண்டும். மல்லிகைப்பூ விவசாயிகள் மட்டும் பயன் பெறும் வகையில் வாட்ஸ்ஆப் குரூப் தொடங்கப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ள விவசாயிகள் 89036 06089ல் தொடர்பு கொண்டு பயனடையலாம். மல்லிகை சாகுபடியில் உள்ள பிரச்னைகள் குறித்து, மதுரை வேளாண் அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லுனர்கள் அருண்குமார், உஷாராணியை தொடர்பு கொள்ளலாம்.

- செல்வி ரமேஷ்

திட்ட ஒருங்கிணைப்பாளர்

வேளாண் அறிவியல் மையம் மதுரை. 94431 85237.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us