/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
அனைத்து மண்ணிலும் விளையும் ஜெ.ஜி.எல்., - 24423 ரக நெல்
/
அனைத்து மண்ணிலும் விளையும் ஜெ.ஜி.எல்., - 24423 ரக நெல்
அனைத்து மண்ணிலும் விளையும் ஜெ.ஜி.எல்., - 24423 ரக நெல்
அனைத்து மண்ணிலும் விளையும் ஜெ.ஜி.எல்., - 24423 ரக நெல்
PUBLISHED ON : டிச 10, 2025

ஜெ .ஜி.எல்., - 24423 ரக நெல் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், படுநெல்லி கிராமத்தைச் சேர்ந்த எல்.வெங்கடேசன் கூறியதாவது:
ஜெ.ஜி.எல்., - 24423 ரக நெல் சாகுபடி செய்துள்ளேன். இந்த ரக நெல், 125 நாளில் மகசூலுக்கு வரும். களிமண், சவுடு மண், செம்மண் உள்ளிட்ட அனைத்து விதமான மண்ணிலும் அருமையாக வளர்கிறது.
இந்த ரக நெற்கதிர், 2.5 அடி உயரத்திற்குள் வளர்வதால், எவ்வளவு மழை, காற்று அடித்தாலும் நெற்கதிர் வயலில் சாய்வதில்லை.
அதேபோல், நல்ல மகசூல் கிடைக்கிறது. ஏக்கருக்கு 53 மூட்டைகள் வரையில், முன்னோடி விவசாயிகள் மகசூல் எடுத்துள்ளனர்.
குறிப்பாக, ஜெ.ஜி.எல்., - 24423 நெல், சன்ன ரகத்திற்கும், குண்டு ரகத்திற்குமிடையே இருக்கும் ஒரு நடுத்தர ரகம். இந்த நெல்லின் பருமன் கூடுதலாக இருப்பதால், கருக்காய், பதர் இன்றி நல்ல எடை திறனுடன் கூடிய மகசூல் கிடைக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: எல். வெங்கடேசன், 94453 35139.

