/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
120 நாளில் அறுவடையாகும் கர்னுால் சன்ன ரக நெல்
/
120 நாளில் அறுவடையாகும் கர்னுால் சன்ன ரக நெல்
PUBLISHED ON : நவ 20, 2024

கர்னுால் சன்ன ரக நெல் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அடுத்த, கூழங்கல்சேரி கிராமத்தைச் சேர்ந்த பாரம்பரிய ரக நெல் சாகுபடி செய்யும் விவசாயி வீ.நடராஜன் கூறியதாவது:
நான், 51 விதமான பாரம்பரிய ரக நெல்லை சாகுபடி செய்து, பாதுகாத்து வருகிறேன். அந்த வரிசையில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கர்னுால் சன்ன ரக நெல்லும் ஒன்றாகும். இந்த ரக நெல், 120 நாளில் அறுவடை செய்யலாம்.
பொதுவாக, பாரம்பரிய ரக நெல் சாகுபடியை பொறுத்தவரையில், இயற்கை விவசாயத்திற்கு ஏற்ப, இலை, தழைகளை போட்டு மண் வளத்தை மேம்படுத்தி வைத்திருக்க வேண்டும். அப்போது தான் நல்ல மகசூல் பெற முடியும்.
குறிப்பாக, மண்ணில் தழைச்சத்து நிறைந்த வளத்தை மேம்படுத்த வேண்டும். இதற்கு, தக்கப்பூண்டு, கொளஞ்சி உள்ளிட்ட விதைகளை விதைக்கலாம். இந்த செடிகளில், பூக்கள் பூக்கும் போதும், மடக்கி உழவு செய்யும் போதும், கூடுதல் மகசூல் ஈட்ட முடியும்.
மேலும், மண் வளத்தில் தழைச்சத்து நிறைந்து இருப்பதால், நோய் மற்றும் பூச்சி தாக்குதல் அறவே இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: வீ.நடராஜன்
99419 23626.