/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
நெல்லை ரக காடைக்கு சந்தையில் தனி மவுசு
/
நெல்லை ரக காடைக்கு சந்தையில் தனி மவுசு
PUBLISHED ON : நவ 20, 2024

திருநெல்வேலி ரக காடை வளர்ப்பு குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் கே.பிரேமவல்லி கூறியதாவது:
விவசாயத்திற்கு அடுத்தபடியாக, ஆடு, மாடு, வாத்து, கோழி ஆகிய கால்நடை வளர்ப்பு தொழில்கள் பிரதானமாக உள்ளன. இனப்பெருக்கம் மற்றும் இறைச்சிக்கு வளர்க்கப்படும் பறவை இனங்கள் உள்ளன.
இதில், திருநெல்வேலி ரக காடைக்கு தனி மவுசு உள்ளது. இந்த காடைகளின் இறைச்சி மற்றும் முட்டை அளவும் கூடுதலாக இருக்கும். குறிப்பாக, காடை வளர்ப்பை பொறுத்தவரையில், தீவனம். தடுப்பூசி, பராமரிப்பு என, அனைத்து செலவுகளும், 25 ரூபாய்க்குள் அடங்கி விடும்.
இந்த காடையை சந்தையில் விற்பனை செய்யும் போது, ஒரு காடை 35 ரூபாய் வரையில் விற்பனை செய்யலாம். ஜப்பானிய காடை உள்ளிட்ட சில ரக காடைகளில், 300 கிராம் மட்டுமே எடை கிடைக்கும். இந்த திருநெல்வேலி ரக காடைகளில், எப்போதும் 100 கிராம் எடை கூடுதலாக கிடைக்கும்.
இதனால், இறைச்சிக்கு வாங்கி செல்வோர் அதிக எடை இருக்கும் திருநெல்வேலி ரக காடைகளை வாங்கி செல்வர். அதே நேரத்தில் முட்டைகளில் அளவும் ஒரு சுற்று அதிகமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: முனைவர் கே.பிரேமவல்லி,
97907 53594.