/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
பாரம்பரிய வெண்டையில் பசுமையான வருவாய் இருக்கு
/
பாரம்பரிய வெண்டையில் பசுமையான வருவாய் இருக்கு
PUBLISHED ON : அக் 16, 2019

பாரம்பரிய ரக வெண்டை சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், சிங்கிலிமேடு கிராமத்தைச் சேர்ந்த, பட்டதாரி விவசாயி ஏ.ராஜா கூறியதாவது:சிறுமணி, ஆத்துார் கிச்சலி சம்பா, வாசனை சீரக சம்பா என, பாரம்பரிய ரக நெல் சாகுபடி செய்து வருகிறேன்.அந்த வரிசையில், பாரம்பரிய காய்கறி வகைகளில், 'யானை கொம்பன்' வெண்டையையும் பயிரிட்டுள்ளேன். இது, வழக்கமான வெண்டையை காட்டிலும் சற்று பெரிதாக காணப்படும். சாதாரண வெண்டைக்காயை எடை போடும் போது, கிலோவிற்கு, 20 காய் நிற்கும். பாரம்பரிய யானை கொம்பன் காயை எடை போடும் போது, 10 காய்கள் தான் நிற்கும்.ஏக்கர், 1க்கு சாதாரண வெண்டை சாகுபடி செய்தால், 10 டன் வரையில் மகசூல் எடுக்கலாம்.யானை கொம்பன் வெண்டை சாகுபடி செய்யும் போது, 20 டன் வரையில் மகசூல் எடுக்கலாம். ஆண்டுக்கு, 2.50 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும்; எங்களிடம் விதைகளும் உள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.தொடர்புக்கு: 96000 00376

