sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

அசோலாவை வளர்ப்போமா

/

அசோலாவை வளர்ப்போமா

அசோலாவை வளர்ப்போமா

அசோலாவை வளர்ப்போமா


PUBLISHED ON : பிப் 13, 2019

Google News

PUBLISHED ON : பிப் 13, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இது பெரணி வகை தாவரம். நீரில் மட்டுமே வளரக்கூடியது. ஆசிய நாடுகளில் அனைத்து தட்ப வெப்ப நிலை உள்ள நாடுகளில் வளரும் தாவரமாகும்.

சாதாரணமாக இந்த அசோலா பற்றி நம்மில் பல விவசாயிகளுக்கு தெரிவதில்லை. இவை அனைத்து வகை நிலங்களிலும் வளரும்.

களரில் வளர்ச்சி சற்று குறைவாக இருக்கும். இவை வளர முதலில் சூப்பர் பாஸ்பேட் உரம் அவசியம். தட்ப வெப்ப நிலை அதிகமாகவோ, குறைவாகவோ உள்ள காலங்களில் வளர்ச்சி தடைபடும். மிதமான வெப்பநிலை வளர்ச்சிக்கு ஏற்றது. வயலில் தண்ணீர் தேங்கினால் மட்டுமே இவை அடந்து வளர முடியும். பிரிதல் மூலம் வேகமாக வயலில் 10 நாட்களில் முழுவதும் பரவி விடும்.

வயல் போர்வை: ஒரு தடவை அசோலா விதைகளை துாவி விட்டால் போதும். தொடர்ந்து ஸ்போர்கள் மூலம் வயல் அறுவடை முடிந்து நாற்று நட்ட பத்து நாட்களில் தானாக முளைத்து விடும். இவை இவ்வளவு வேகமாக வளர முக்கிய காரணம் காற்றில் உள்ள தழைச்சத்தினை (நைட்ரஜன்) உறிஞ்சும் தன்மை உடையதால் நெல் வயல் முழுவதும் பல டன்கள் பெருகி விடும். நெல் சாகுபடியில் தேவையான தழைச்சத்துக்களில் அசோலாவால் 15 சதவீதம் மிச்சப்படுத்தப்படுகிறது.

முக்கியமாக காற்றில் உள்ள 78 சதவீத தழை சத்தினை கிரகித்து நெல் பயிருக்கு கொடுப்பதுடன் சில வளர்ச்சி ஊக்கிகளான அமினோ அமிலங்களை சேர்த்து கொடுக்கப்படுகிறது. வயலின் மேற்பரப்பை போர்வை போன்று மூடி விடுவதால் களைகள் வெகுவாக கட்டுப்படுத்தப்படுகிறது.

மண் வள மேலாண்மை: சூரிய ஒளியிலிருந்து இவை தனக்கு தானே உணவு தயாரித்து கொள்கின்றன. நீர் ஆவியாதல் தடுக்கப்படுகிறது. வரிசை நடவு, செம்மை நெல் சாகுபடியில் நெல் வயலில் பயிர்களுக்கு இடையே 'கோனா வீடர்' கொண்டு களை எடுக்கும் போது இவை சேற்றில் அமிழ்ந்து மக்கி உரமாகிறது.

இதனால் மண் வளம் மேம்படுகிறது. கொசுக்கள் தண்ணீரின் மேற்பரப்பில் முட்டையிடுவதை முற்றிலும் தடுக்கிறது. இலையின் மீது மழை பெய்தாலும் மழை துளி இலையில் ஒட்டாது.

இதனால் இது அழிந்து போவதில்லை. மிதந்து கொண்டே இருக்கும்.

20 சதவீதம் மகசூல் வரை கூடுதலாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. தனியாக தொட்டிகளில் அசோலா வளர்ப்பவர்கள் மண்புழு உரத்தை தண்ணீரில் கரைத்து விட்டு அதில் வளர்க்கும் போது நன்கு வளரும்.

நில, கால்நடை வளம்: குளங்களில் மீன் வளர்ப்பவர்களுக்கு நல்ல தீவனமாக பயன்படுகிறது. இதை சாப்பிட்டு வளரும் மீன்கள் சுவையாக இருக்கும். இவற்றின் வளர்ச்சி சீராக இருக்கும். கால்நடைகள் முதலில் சாப்பிட மறுக்கும். அப்போது அவற்றின் மேல் வெல்லம் கரைத்த தண்ணீரை தெளித்து 2,3 நாள் தொடர்ந்து கொடுக்க பழகிவிடும்.

இவற்றை உண்பதால் புரதச்சத்து, அமினோ அமிலங்கள் நிறைந்த இயற்கை உணவாகும். கால்நடைகளின் சினை சுழற்சி சரியாக நடைபெறும். எனவே விவசாயிகள் குறைந்தளவில் நீரை கொண்டு அசோலாவை வளர்த்து நில வளம், கால்நடை வளத்தை பெருக்கலாம். தொடர்புக்கு 94435 70289.

- எஸ்.சந்திரசேகரன்

வேளாண் ஆலோசகர்

அருப்புகோட்டை







      Dinamalar
      Follow us