/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
அதிக சுவையுடன் கூடிய நீள ரக சப்போட்டா பழம்
/
அதிக சுவையுடன் கூடிய நீள ரக சப்போட்டா பழம்
PUBLISHED ON : ஏப் 09, 2025

நீள ரக சப்போட்டா சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த செடிகள் உற்பத்தி செய்யும் விவசாயி கே.சசிகலா கூறியதாவது:
நம்மூர் கோடை வெயில் மற்றும் மழைக்கு ஏற்ற வாறு, குளிர் மற்றும் வறட்சியான பிரதேசங்களில் விளையும், பலவித பழங்கள் மற்றும் காய் மரங்களை சாகுபடி செய்யலாம்.
அந்த வரிசையில், நீள ரக சப்போட்டா மரத்தை சாகுபடி செய்துள்ளேன். இவற்றை மாடி தோட்டம் மற்றும் விளை நிலங்களில், எளிதாக சாகுபடி செய்யலாம். அந்த அளவிற்கு மிகவும் குட்டையாக இருக்கும்.
நம் ஊரின் மணல் கலந்த களிமண், சவுடு மண் உள்ளிட்ட பல வித மண்ணுக்கு ஊட்டத்துடன் வளர்கிறது. குறிப்பாக, விளைநிலம் இல்லாதவர்கள், மாடித் தோட்டத்தில் பிளாஸ் டிக் பேரலில் சாகுபடி செய்யலாம்.
இந்த பழம், பிற ரக சப்போட்டா பழங்களை போல உருளை வடிவ மாக இல்லாமல், நீளமாக இருப்பதால், நீள ரக சப்போட்டா என, அழைக்கப்படுகிறது.
இது, பனானா சப்போட்டா எனவும் அழைக்கப்படுகிறது. இந்த ரக சப்போட்டா பழம் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். அதிக சுவையுடன் கூடிய பழமாகும். கூடுதல் விலை கொடுத்து வாங்கவும் மக்கள் தயக்கம் காட்டுவதில்லை.
இவ்வாறு அவர்கூறினார்.
தொடர்புக்கு: கே.சசிகலா,
72005 14168.