/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
தென்னையை தாக்கும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த கரைசல்
/
தென்னையை தாக்கும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த கரைசல்
தென்னையை தாக்கும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த கரைசல்
தென்னையை தாக்கும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த கரைசல்
PUBLISHED ON : ஏப் 09, 2025

தென்னையை தாக்கும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துவது குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திரூர் நெல் ஆராய்ச்சி மைய தாவர நோயியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் செ.சுதாஷா கூறியதாவது:
தென்னை சாகுபடியில், சுருள் வடிவ வெள்ளை ஈ தாக்குதல் அதிகமாகக் காணப்படும். நோய் தாக்கிய தென்னை இலைகள், மஞ்சள் நிறத்திற்கு மாறிவிடும். மேலும், மட்டையின் கீழ் பாகத்தில் கரும்பு பூஞ்சாணம் தோன்றி, இலைகள் ஆங்காங்கே புள்ளி விழுந்து இலைகள் உதிர்ந்துவிடும்.
குறிப்பாக, வட்ட வடிவத்தில் முட்டையிட்டு இலைகளின் அடிப்பரப்பில் வெள்ளை மாவு போன்ற பூசால் பூசப்பட்டு இருக்கும். இந்த வட்டத்தில் இருந்து வெளியே வரும் வெள்ளை ஈக்களின் குஞ்சுகள் மெழுகு போன்ற வழுவழுப்பு தன்மையுடன் இருக்கும். அதிகாலையில், இதன் நடமாட்டம் அதிகமாக இருக்கும். நோய் பரப்பும் தன்மையும் அதிகமாக இருக்கும்.
இதை கட்டுப்படுத்துவதற்கு, தென்னங்கீற்றின் அடிப்பரப்புகளில் படர்ந்திருக்கும் வெள்ளை ஈக்களின் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்க வேண்டும். விளக்கெண்ணெய் தடவிய காகிதம் ௧ஏக்கருக்கு 20 இடங்களில் அமைக்க வேண்டும்.என்கார்சியா ஒட்டுண்ணிகளை ஏக்கருக்கு 10 இலை துண்டுகள் வீதம், 10 மரங்களுக்கு ஒரு இலைத்துண்டு என்ற எண்ணிக்கையில் கீற்றுகளில் இணைக்கவும்.
தென்னைக்கு நடுவே கல் வாழை, சீதா செடிகள் ஊடுபயிராக நட வேண்டும். சோறு வடித்த கஞ்சி தண்ணீரை தெளிக்கலாம். கரும்பு பூஞ்சாணத்தை நீக்குவதற்கு, 25 கிராம் மைதா மாவுடன் ௧ லிட்டர்தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கூறினார்.
தொடர்புக்கு: முனைவர். செ.சுதாஷா,
97910 15355.