/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
மாமரத்தில் தண்டு துளைப்பான் கட்டுப்படுத்தி மகசூல் பெறலாம்
/
மாமரத்தில் தண்டு துளைப்பான் கட்டுப்படுத்தி மகசூல் பெறலாம்
மாமரத்தில் தண்டு துளைப்பான் கட்டுப்படுத்தி மகசூல் பெறலாம்
மாமரத்தில் தண்டு துளைப்பான் கட்டுப்படுத்தி மகசூல் பெறலாம்
PUBLISHED ON : ஜூலை 16, 2025

மாமரத்தில் தண்டு துளைப்பான் கட்டுப்படுத்தும் முறை குறித்து, செங்கல்பட்டு கரும்பூர் கிராமத்தை சேர்ந்த செடிகள் உற்பத்தி செய்யும் முன்னோடி விவசாயி கே.சசிகலா கூறியதாவது:
நம்மூர் கோடை வெயில் மற்றும் மழைக்கு ஏற்றவாறு, குளிர் மற்றும் வறண்ட பிரதேசங்களில் விளையும், மா, கொய்யா உள்ளிட்ட பல வித பழங்கள் மற்றும் காய் மரங்களை சாகுபடி செய்யலாம்.
அந்த வரிசையில், மாமரத்தை தாக்கும் தண்டு துளைப்பான் பூச்சிகளை எளிதாக கட்டுப்படுத்தலாம். அதற்கு ஏற்ப, இலை, வேர், தண்டு ஆகிய மூன்று பகுதிகளை நன்றாக கவனிக்க வேண்டும்.
தண்டு துளைப்பானை பொறுத்தவரையில், மாமரத் தண்டு பகுதியில் அரிப்பை ஏற்படுத்தி, ஒரு ஓட்டை வழியாக முட்டைகள் இட்டு, புழுக்களாக மாறும் தன்மை உடையது.
மாமர இலைகளுக்கு செல்ல வேண்டிய சத்து முழுதும், இந்த புழுக்கள் எடுத்துக்கொள்ளும், நாளடைவில் மாமரத்தை உலர்த்தி விடும் தன்மை உடையது. இதை, துவக்கத்திலேயே கண்டறிந்து கட்டுப்படுத்த வேண்டும்.
குறிப்பாக, தண்டு துளைப்பான் தாக்கிய இடத்தை சுத்தம் செய்துவிட்டு, நோக்ரான் என்னும் பூச்சி மருந்தை தெளிக்க வேண்டும். இதுதவிர, பைடலான் பூஞ்சான மருந்தை தண்டு துளைப்பான் தாக்கிய இடத்தில் தடவி விட வேண்டும்.
இதுபோல செய்தால், மாமரத்தில் தண்டு துளைப்பான் முறையை எளிதாக கட்டுப்படுத்தி மகசூல் பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: கே.சசிகலா, 72005 14168