தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/மாமரத்தில் 'நுனிக்கருகல்'

மாமரத்தில் 'நுனிக்கருகல்'

மாமரத்தில் 'நுனிக்கருகல்'


PUBLISHED ON : அக் 25, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 25, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாமரம் அதிக வறட்சியை தாங்கி வளரக்கூடியது. இம்மரங்கள் கடல் மட்டத்தில் இருந்து 1,500 மீட்டர் உயரம் வரை சாகுபடி செய்யப்படுகின்றன. தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், தேனி, சேலம், தர்மபுரி மாவட்டங்களில் நீலம், பெங்களூரா, செந்துாரம், அல்போன்சா, காலாபேடு, இமாம்பசந்து ஆகிய ரகங்கள் அதிகம் விளைவிக்கப்படுகிறது. மாமரங்களில் மென்சாம்பல்,

இலைப்புள்ளி நோய் மற்றும் கரும்படலம் போன்ற நோய்களின் தாக்குதல் இருந்தாலும், தற்போது நுனிக் கருகல் நோயும் வெகுவாக பரவி வருகிறது.

நோயின் அறிகுறிகள்

நோய் தாக்கிய மரத்தின் நுனிகள் முதலில் கருகி விடும். நோயுற்ற மரத்தின் கிளை நுனி அல்லது தளிர் இலைகள் கருகி காய்ந்து விடும். நோய் தீவிரமாகும் போது நுனியிலிருந்து

நோய் கீழ் நோக்கி பரவும். பூக்கள் அதிகளவு உதிர்ந்து விடும். நோயினால் பாதிக்கப்பட்ட மரப்பட்டை அல்லது கிளைகளில் கறுப்பு நிறப்புள்ளிகள் தோன்றும். அவையாவும் பூசணத்தின் வித்து திரள்களேயாகும். இவற்றிலிருந்து எண்ணற்ற பூசண வித்துக்கள் உற்பத்தியாகின்றன. இவை காற்றின் மூலம் பரவுகின்றன. இந்நோய், செடி முதல் மரம் வரை அனைத்து வயது மரங்களையும் தாக்கும்.மழை காலம் தொடங்கியுள்ளதால் நோய் தீவிரமாக பரவி வருகிறது. நோயின் ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டவுடன் கட்டுப்படுத்துதல் அவசியம். மரங்களின் அடிப்பகுதியில் கவாத்து செய்வதால் மட்டும் நோயை கட்டுப்படுத்த இயலாது. புது தளிர்கள் தோன்றி அவைகளும் கருகி விடும். எனவே இந்நோய் தோன்றும் பொழுதே பின் நோக்கி காயும் குச்சிகளை பச்சையம் உள்ள இடம் வரை கவாத்து செய்து, அப்பகுதியில் காப்பர்

ஆக்சி குளோரைடு பசையை தடவ வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் 2 கிராம் கார்பன்டசிம் மருந்தினை மூன்று முறை 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும் என மதுரை வேளாண் பல்கலையின் வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுனர்கள் அருண்குமார், மனோன்மணி தெரிவித்துள்ளனர்..

- முனைவர் செல்விரமேஷ்

ஒருங்கிணைப்பாளர்

வேளாண் அறிவியல் மையம், மதுரை.

94431 85237

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us