தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/வேம்பு எனும் காயகல்ப மூலிகை

வேம்பு எனும் காயகல்ப மூலிகை

வேம்பு எனும் காயகல்ப மூலிகை


PUBLISHED ON : அக் 25, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 25, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பண்டைய காலங்களில் போரிலும், போட்டியிலும் வெற்றி பெற்ற வீரர்கள் வேப்பம் பூமாலை தரித்து மக்களுக்கு தரிசனம் தந்தார்கள் என்பது வரலாறு. இதன் மூலம் வேப்பம் பூமாலைக்கு எத்தகைய மரியாதையை மக்கள் அளித்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மன்னர்களும், மகா பிரபுக்களும் நிழலுக்காக சாலைகள்தோறும் வேப்ப மரங்களை வளர்த்து வந்தனர். கோடை காலத்தில் ஒப்பற்ற கொடையாக வேப்ப மரம் இருந்து வருகிறது.

பித்தம், நீரிழிவு, தொழுநோய், தோல் நோய், வாய் நோய் உட்பட வெப்ப கால அனைத்து நோய்களுக்கும் அதிசய நிவாரணி வேம்பு எனலாம்.

உடம்பில் தோன்றும் வெப்ப நோய்களுக்கும் வேப்ப மரம் பயனாவதால் சர்வரோக நிவாரணி என்றும், காய கல்ப மூலிகை எனவும் இது போற்றி பாராட்டப்படுகிறது. ''புத்தியை தீட்டும்; புண் பிணியைப் போக்கும். இந்திரியத்தை நன்கு இசைவிக்கும் வேம்பு,'' என தேரையர் வெண்பா தெளிவுபடுத்துகிறது. வேப்பிலையை அரைத்து உடம்பில் பூசிக் குளிக்க உற்சாகம் உண்டாகும்.

வேம்பு ஊறுகாய் ஆரோக்கியம் அளிக்கும். வேம்பின் வாசம் வினோதமான உபவாசம்.

வேப்ப மரம் வளர்ப்பு

மக்கள் குடியிருப்புகள், வழிபாட்டு தலங்கள், தோட்டங்கள், சாலையோரங்கள், மலையடி வாரங்கள், வீட்டு முற்றங்களில் வேம்பு வளர்க்க ஏற்ற இடம். தொடக்கத்தில் வேப்ப விதையிலிருந்து முளைத்து வருகின்ற செடி உயர்ந்து வரும்போது அது மெலிதாக இருப்பதால், பக்கத் துணையாக மூங்கில் குச்சிகளை அதற்கு துணையாக ஒட்டி மேலும், கீழும் கயிறு கொண்டு கட்டி வைப்பதுவே ஆரம்ப கால முறையாகும். பின் அது பலப்படுத்துவதற்கு ஆரம்பித்ததும் மூங்கிலின் துணையின்றி உறுதியாக நின்று சுயாட்சி பெறும். கூர்மையான பற்களை போன்ற கூட்டு இலைகளையும், வெள்ளை நிறமான பூக்களையும் இது கொண்டுள்ளது.இதன் காயும், பழமும் நீளவட்ட வடிவிலே சதை பற்றோடும், எண்ணெய் சத்து விதையோடும் காணப்படும்.



பலன்கள்


வேப்பமரத்து இலைகள், குச்சிகள், கிளைகள், கனிகள், பட்டைகள், கட்டைகள் இவை அனைத்துமே கசப்புத்தன்மை வாய்ந்தது. இதன் கசப்பிலே பல தரப்பட்ட உயர்தர மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளன. இதன் கொழுந்து இலைகளில் கசப்பு அதிகமாக காணப்படாத காரணத்தால், அதை அன்றாடம் காலை நேரத்தில் வெறும் வயிற்றில் உட்கொள்வோரும் உள்ளனர். இதனால் வயிற்றுப் பிணிகள் நீங்குவதோடு, பெரும்பாலான நோய்கள் ஏற்படுவதும் இல்லை. ஆரோக்கிய வாழ்விற்கு வேப்ப மரம் பேருதவியாக, பெரும் தெய்வமாக

அமைந்துள்ளது எனலாம். இயற்கையின் வரப்பிரசாதம் எனவும் இயம்பலாம். நீரிழிவு நோயாளிகளுக்கு வேப்பிலை நல்ல ஒரு மருந்தாக அமைந்துள்ளது. உடம்பில் உள்ள கெட்ட கிருமிகளையும், கண்களுக்குப் புலப்படாத புழுக்களையும் மாய்க்கும் அற்புத சக்தி இதற்கு உண்டு.

- எஸ்.நாகரத்தினம்

விவசாய ஆலோசகர்

விருதுநகர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us