தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/மைக்கோரைசா (அ) வேம் (அகவேர்ப்பூஞ்சை) பெருக்கம் செய்யும் முறை

மைக்கோரைசா (அ) வேம் (அகவேர்ப்பூஞ்சை) பெருக்கம் செய்யும் முறை

மைக்கோரைசா (அ) வேம் (அகவேர்ப்பூஞ்சை) பெருக்கம் செய்யும் முறை


PUBLISHED ON : நவ 10, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 10, 2010


Follow on Google
அ நிறம் | அளவு

தேவையான பொருட்கள்: 1. வெர்மிகுலேட் (கிரேடு-5)-250 கிலோ, (அ) தேவையான அளவு வெர்மிகுலேட்டை தமிழ்நாடு கனிமப் பொருட்கள் லிமிடெட், நம்பர் 31, காமராஜர் சாலை, TWAD ஹவுஸ், சேப்பாக், தபால் பெட்டி எண்: 2961, சென்னை-5 என்ற முகவரியில் கேட்டு வாங்கிக் கொள்ளலாம். போன்: 044-2853 0362 - 2857 0172. 500 கிலோவின் விலை ரூ.1,235/-.

2. ஆர்பஸ்குலர் மைக்கோரைசா-5 கிலோ, 1 கிலோவின் விலை ரூ.25/-. வேளாண்மை நுண்ணுயிரியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை என்ற முகவரியில் வாங்கலாம்.

3. மக்காச்சோள விதை-250 கிராம். 500 கிலோ வெர்மிகுலேட் அளவிற்கு 11x 3 x 1½  அடி அளவில் நான்கு குழிகள் வெட்ட வேண்டும். அல்லது சிறிய அளவில் உற்பத்தி செய்ய சிமென்ட் தொட்டிகள் போதுமானது (1 ½  அடி ஆழம் இருக்க வேண்டும்).

11x  3 x  1½ அடி குழியில் கருப்பு பாலிதீன் கவர் விரிக்க வேண்டும். அதன்மேல் வெர்மிகுலேட்: செம்மண், மணல், தொழுஉரம் (அல்லது ஆலை அழுக்கு) 3:2:1:1 என்ற விகிதத்தில் குழியில் கலந்து நிரப்ப வேண்டும். 100 கிராம் ஆர்பஸ்குலர் மைக்கோரைசாவை (60x 30 செ.மீ. இடைவெளியில் வைத்து) அதன்மேல் இரண்டு மக்காச்சோள விதைகளை ஊன்ற வேண்டும். 100 கிராம்  யூரியா + 100 கிராம் சூப்பர் பாஸ்பேட் + 100 கிராம் மூரியேட் ஆப் பொட்டாஷ் மூன்றையும் நன்கு கலந்து விதைத்த மக்காச்சோள விதைகளிலிருந்து (பயிரிலிருந்து) 5 செ.மீ. தூரம் தள்ளி ஒரு செடிக்கு ஒரு கிராம் என்ற அளவில் 15 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை வைக்க வேண்டும்.

மக்காச்சோள பயிர் முளைக்கும் வரை இரண்டு நாட்களுக்கொருமுறை தண்ணீர் விடவேண்டும். பின்னர் வாரத்திற்கொருமுறை பூவாளியில் தண்ணீர் தெளித்தல் போதுமானது. 40 நாட்கள் கழித்து மக்காச்சோளப் பயிரின் இலை, பூ, பகுதிகளை நீக்கிவிட வேண்டும். 60-65 நாட்கள் கழித்து மக்காச்சோள பயிரின் மண்ணிற்கு மேல் இருக்கும் தண்டுப்பகுதியை வெட்டி எறிந்துவிட வேண்டும். வேர்ப்பகுதியை மட்டும் ஒரு இன்ச் துண்டுகளாக வெட்டி குழியில்  உள்ள வெர்மிகுலேட்டுடன் நன்கு கலந்து உயிர் உரமாக உபயோகிக்கலாம். மக்காச்சோளப் பயிரின் வேர்ப்பகுதியில் ஆர்பஸ்குலர் மைக்கோரைசா பூஞ்சை நன்கு பல்கி பெருகியிருக்கும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அலுவலக தொலைபேசியில் தொடர்புகொண்டு தெளிவான விளக்கம் பெறலாம். 044-2743 1393.

தாமரைச்செல்வி, உதவி ஆராய்ச்சி அலுவலர், 90036 11419,
ராம.கந்தசாமி, பூச்சியியலார், 98407 59983,
உயிரியல் ஆய்வு மையம், தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணையம்,
வெண்பாக்கம், செங்கல்பட்டு-603 111.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us