தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/மலராத மல்லிகை மொட்டுக்களை மலரவைக்க...

மலராத மல்லிகை மொட்டுக்களை மலரவைக்க...

மலராத மல்லிகை மொட்டுக்களை மலரவைக்க...


PUBLISHED ON : நவ 10, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 10, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நம் தமிழகத்தில் மல்லிகை சாகுபடி செய்ய, செம்மண், மணல் கலந்த செம்மண் மற்றும் மலர்கள் கருகலின்றி பூக்கத் தேவையான மிதமான குளிர்ந்த (சப்-டிராபிகல்) சீதோஷ்ண நிலையில் உள்ள திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் பல பகுதிகள் மற்றும் சிவகங்கை, ராஜபாளையம், விருதுநகர் மாவட்டத்தில் பிற மாவட்டங்களில் செம்மண் சார்ந்த சில பகுதிகளிலும் மல்லிகை சாகுபடி செய்யப்படுகிறது.

சாதாரணமாக மல்லிகை மலர்களை விடியற்காலையில் 4 மணிமுதல் 7 மணிக்குள் மொட்டுக்கள் மலரும் முன்பே அறுவடை செய்வது அவசியமான ஒன்றாகும். அப்போதுதான் மல்லிகை மொட்டுக்கள் படிப்படியாக மலர்ந்து இரவு விற்பனையாகும் வரை தாங்கும். தவறும்போது சில மணிநேரங்களிலேயே மலர்ந்து, பறித்தபின் விரைவிலேயே வாடிவிடும். இத்தகைய பூக்களின் நிறமும் மங்கியே காணப்படும்.

இவ்வாறு அறுவடை செய்யும்போது சில மலர்கள் ரப்பர் போன்ற தரக்குறைவான தன்மையுடனும், மொட்டுக்கள் அளவில் சிறியதாகவும், ஒரே அளவின்றி பல்வேறு விதங்களிலும், இறுக்கிப் பிடித்தது போன்று மொத்தமாகவும் காணப்படும். இந்த நிலையிலேயே 5 முதல் 7 நாட்கள் வரை கூட அப்படியே இருக்கும். மல்லிகையில் இந்த அறிகுறியானது போரான் எனப்படும் நுண் ஊட்டச்சத்தின் பற்றாக்குறையால் ஏற்படுவதாகும். இதனைத் தவிர்க்க போராக்ஸ்-30 கிராம்/டேங்கிற்கு + சல்மன்-சி 50கிராம்/டேங்கிற்கு + போட்டோசால் 20கிராம்/டேங்கிற்கு என்ற அளவில் 15 நாட்கள் இடைவெளியில் மேற்கண்ட அறிகுறிகள் மாறும் வரை 2 முதல் 4 முறை தெளிக்கவும். சூரிய ஒளியின் உச்சபட்ச வேலைகளாக காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மருந்து தெளிப்பதைத் தவிர்க்கவும்.

எம்.ராசா, 88700 33302, கே.வடிவேல்குமார், 77080 13650, வேளாண் ஆலோசனை குழுமம்,
172, வணிக வளாகம் (பூ மார்க்கெட்),மாட்டுத்தாவணி, மதுரை-625 007.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us