தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/நிலக்கடலையில் நுண்ணுாட்ட சத்து மேலாண்மை

நிலக்கடலையில் நுண்ணுாட்ட சத்து மேலாண்மை

நிலக்கடலையில் நுண்ணுாட்ட சத்து மேலாண்மை


PUBLISHED ON : நவ 29, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 29, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நிலக்கடலையில் திரட்சியான பருப்புகளைப் பெறுவதற்கு நுண்ணுாட்ட சத்து மேலாண்மை செய்ய வேண்டும்.

நிலக்கடலையில் பருப்பின் வளர்ச்சி குறைபாட்டை தவிர்த்து முழுமையான பருப்புகளை பெறுவதற்கு ஊட்டச்சத்துக் கலவையை கலந்து தெளிக்க வேண்டும். இந்த கலவையை தயாரிக்க டி.ஏ.பி 2.5 கிலோ, அம்மோனியம் சல்பேட் 1 கிலோ மற்றும் போராக்ஸ் (வெண்சுரம்) அரை கிலோ எடுத்து 37 லிட்டர் தண்ணீரில் ஒன்றாக கலந்து, இரவு ஊறவிட வேண்டும்.

மறுநாள் காலை கலவையை வடிகட்டினால் 32 லிட்டர் தெளிந்த ஊட்டச்சத்து நீர் கிடைக்கும். இதனை 468 லிட்டர் தண்ணீருடன் சேர்த்தால் 500 லிட்டர் கலவை தயாராகி விடும்.

இதனுடன் 'பிளானோபிக்ஸ்' 350 மில்லியை கலந்து, நிலக்கடலை விதைத்த 25 மற்றும் 35ம் நாட்களில் தெளிக்க வேண்டும்.

பூ உதிராமல் தடுக்கலாம்

பூக்கள் உதிராமல் தடுத்து விதை பிடிக்கவும் வறட்சியை தாங்கி வளரவும் தமிழ்நாடு வேளாண் பல்கலை வெளியிட்டுள்ள நிலக்கடலை வளர்ச்சி ஊக்கியை பயன்படுத்தலாம். 50 சதவீத பூக்கள் உருவாகும் தருணத்திலும் விதை உருவாகும் தருணத்தில் எக்டேருக்கு 5 கிலோ எடுத்து 500 லிட்டர் தண்ணீரில் கலந்து இரண்டு முறை தெளிக்க வேண்டும்.

சத்துகள் பற்றாக்குறை

துத்தநாக பற்றாக்குறையை சரிசெய்ய எக்டேருக்கு 25 கிலோ சிங்க் சல்பேட்டை அடியுரமாக இட வேண்டும்.

இரும்புச்சத்து பற்றாக்குறையை போக்க ஒரு சதவீத இரும்பு சல்பேட், 0.1 சதவீ சிட்ரிக் அமிலம் கலவையை விதைத்த 30, 40 மற்றும் 50ம் நாட்களில் இலைவழி தெளிப்பாக தெளிக்க வேண்டும்.

அல்லது எக்டேருக்கு 50 கிலோ பெர்ரஸ் சல்பேட்டை 12.5 டன் தொழு உரத்துடன் கலந்து அடியுரமாக இட வேண்டும். போரான் பற்றாக்குறைக்கு போராக்ஸ் 10 கிலோ அல்லது 0.2 சத போரிக் அமிலத்தை விதைத்த 40 மற்றும் 50வது நாட்களில் இட வேண்டும்.

நிலக்கடலை சாகுபடியில் அதிக மகசூல் பெற சான்றுபெற்ற விதைகளையே பயன்படுத்த வேண்டும். விதையின் தரத்தை அறிய அந்தந்த மாவட்டங்களில் உள்ள விதைப் பரிசோதனை மையங்களை அணுகலாம்.

மாதிரி விதைக்கான கட்டணம் ரூ.80. விதைகளின் புறத்துாய்மை, ஈரப்பதம், முளைப்புத்திறன், பிறரக விதை கலப்பு போன்றவற்றை ஆய்வில் பெற்று அதற்கேற்ப விதைக்கலாம்.

- மகாலட்சுமிவிதைப் பரிசோதனை அலுவலர்- ஜானகி, சாய்லெட்சுமி சரண்யாவேளாண்மை அலுவலர்கள்விதைப் பரிசோதனை நிலையம், விருதுநகர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us