PUBLISHED ON : ஜன 30, 2019

எந்த பயிரிலும் வெற்றிக் கதைகள், ஆராய்ச்சி முடிவுகள் பல உள்ளன. அவற்றை விரிவாக மேற்கொள்ள சிறந்த உத்திகள் மூலம் அறிந்து கொள்ள வழிவகை உள்ளன. வேளாண் செய்திகள், புத்தகம், துண்டு பிரசுரம், விவசாயிகள் சுற்றுலா என பல விதங்களில் விவசாயிகள் பலன்பெற தெரிவிக்கப்பட்டு வருகிறது.
ஆடி மாதம் பயிரிட வேண்டிய மரப்பயிர்களில் லாபம் தரும் என்று திட்டமிட்டு கன்றுகள் வாங்குதல் மற்றும் காய்கறி பயிர் நாற்று உற்பத்திக்கு திட்டமிடல், கோடை மழை கிடைப்பதனை நன்கு பயன்படுத்திட பண்ணை குட்டை அமைத்தல், வட்டப்பாத்திகள் ஏற்பாடு, மானாவாரி பகுதியில் சரிவுக்கு குறுக்கே உழவு, சம மட்ட வரப்பு எடுத்தல், வரப்பு வேலிகளில் குழிகள் எடுத்து மரக்கன்றுகள் நட திட்டம் வகுத்தல். வறட்சி நிர்வாகத்துக்குரிய இடு பொருட்களாக நிலப்போர்வை அமைத்திட விதைகள் வாங்குதல், விதை நேர்த்தி செய்து விதைகள் தயாரித்தல், பழ மரக்கன்றுகள் வாங்கி தன் தோட்டத்தில் கன்றுகளை க்யூரிங் எனும் தன் தோட்ட சூழலுக்கு ஏற்ப கன்றுகள் தயார்படுத்திக்கொள்ள அவகாசம் தருதல், பசுங் கன்றுகள் வாங்குதல், பாலி ஹவுஸ் அமைத்து சாகுபடி செய்திட விரும்பினால், அதற்கு நிறவனப் பெயர்களை அறிதல், நிலப்போர்வை பாலித்தீன் பலிச்சிங் தேவை என்றால் தோட்டக்கலைத்துறையில் பதிவு செய்தல் உள்ளிட்ட பணிகளை விவசாயிகள் இப்போதிலிருந்தே ஈடுபட வேண்டும். தொடர்புக்கு 98420 07125.
- டாக்டர் பா.இளங்கோவன்
வேளாண் துணை இயக்குனர், தேனி

