/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
இறைச்சி கால்நடை வளர்ப்பில் சுகாதாரம் அவசியம்
/
இறைச்சி கால்நடை வளர்ப்பில் சுகாதாரம் அவசியம்
PUBLISHED ON : ஜன 30, 2019

இன்றைய சூழ்நிலையில் சுகாதாரமான முறையில் இறைச்சி உற்பத்தி செய்ய வேண்டியது அவசியம். இறைச்சிக்காக வளர்க்கும் கால்நடை பண்ணை முதல் இறைச்சி கூடம் வரை சுத்தமாக இருக்க வேண்டும்.
முதலில் இறைச்சிக்கான கால்நடை இனத்தை தேர்வு செய்து வளர்க்க வேண்டும். சுகாதாரமான, காற்றோட்டத்துடன் கால்நடைகளில் எண்ணிக்கைக்கு ஏற்ப இடவசதி தேவை. சுத்தமான தண்ணீர், தீவனம் அளிப்பதால் கால்நடைகளுக்கு நோய் வராமல் தடுக்கலாம்.
சுழற்சி முறையில் குடற்புழு நீக்கம் காட்டாயம் செய்ய வேண்டும். இப்படி செய்யாவிட்டால் இறைச்சிக்கான கால்நடைகள் உடல் எடை குறைந்து, மெலிந்துவிடும். நோய் வராமல் தடுக்க தடுப்பு ஊசிகள் போடுவது அவசியம்.
கால்நடைகளை கொண்டு செல்லும் வாகனங்களில் போதுமான இடவசதி இருக்க வேண்டும். இளம் கால்நடைகளை குறைந்தபட்சம் 8 மணி நேரம் வரை தொடர்ந்து எடுத்துச் செல்லலாம். வளர்ந்த கால்நடைகளை 28 மணி நேரம் வரை அழைத்துச் செல்லலாம்.
இடையில் ஒரு மணி நேரம் இடைவெளி மட்டும் தேவை. அருகில் உள்ள இடத்திற்கு நடைபாதையாக அழைத்துச் செல்லலாம். நடைபாதையாக கொண்டு செல்லப்படும் கால்நடைகளை துன்புறுத்தாமல் பட்டியில் அடைக்க வேண்டும். காயங்களாலும், போக்குவரத்து அழுத்தத்தாலும் இறைச்சியின் தரம் பாதிக்கும்.
அதிக நேரம் கால்நடை பயணித்தால் அவைகளுக்கு போதுமான தண்ணீர், ஓய்வு அவசியம். குறைந்தபட்சம் 12 -18 மணி நேரம் தங்கும் பட்டியில் வைத்த பின் குளிக்க வைத்து இறைச்சி கூடத்திற்கு அனுப்பலாம். கால்நடைகளை இறைச்சியாக்கும் நோய் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும்.
இறைச்சி கூடத்தின் சுவர் பளபளப்பாகவும், தரை தளம் சொரசொரப்பாகவும் இருக்க வேண்டும். மரக்கதவு தவிர்த்து ஊலோக கதவு பொருத்த வேண்டும்.
இறைச்சிகளை சேமிக்க குளிர்விப்பான், குளிரூட்டப்பபட்ட சாதனங்கள் அவசியம். பணியாளர்கள் சுத்தமான கைகள், ஆடைகளுடன் சுகாதாரமாக இருக்க வேண்டும்.
இறைச்சி கூடத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் உள்ளே தேங்காத அளவிற்கு வடிகால் இருக்க வேண்டும்.
இதை எல்லாம் பின்பற்றினால் சுகாதாரமான முறையில் கால்நடை இறைச்சியை உற்பத்தி செய்யலாம். தொடர்புக்கு: 95662 53929
-எம்.ஞானசேகர்
விவசாய தொழில் ஆலோசகர்

