sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

நவீன நுண்ணுயிர் பாசன திட்டம் 100, 75 சதவிகிதம் மானியம் ரெடி

/

நவீன நுண்ணுயிர் பாசன திட்டம் 100, 75 சதவிகிதம் மானியம் ரெடி

நவீன நுண்ணுயிர் பாசன திட்டம் 100, 75 சதவிகிதம் மானியம் ரெடி

நவீன நுண்ணுயிர் பாசன திட்டம் 100, 75 சதவிகிதம் மானியம் ரெடி


PUBLISHED ON : மே 16, 2018

Google News

PUBLISHED ON : மே 16, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்திய அரசின் பி.எம்.கே.எஸ்.ஒய்., (பிரதமர் நீர் பாசன திட்டம்) கீழ் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிறு, குறு, மகளிர் விவசாயிகள் தங்களுக்கு ஐந்து ஏக்கருக்கு கீழ் நிலம் இருந்தால் நவீன நுண்ணுயிர் பாசன திட்டம் அமைக்க 100 சதவிகிதம் மானியம் வேளாண்மைத்துறை மூலம் வழங்கப்படும்.

இதன்படி ஏக்கருக்கு தோராயமாக 1,000 ரூபாய் மட்டும் செலுத்தி 100 சதவிகித மானியம் பெற்று தங்களது பண்ணையில் உடனடியாக நவீன நுண்ணுயிர் பாசன திட்டம் அமைத்து கொள்ளலாம்.

ஐந்து ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகள் ஏக்கருக்கு 2,000 ரூபாய் மட்டும் செலுத்தி 75 சதவிகித மானியம் வீதம் அதிகபட்சமாக 12.50 ஏக்கருக்கு பெறலாம். பழைய சொட்டு நீர் பாசனம் எதுவாயினும், அதை மாற்றி புதிதாக அமைத்து கொள்ளவும் முடியும். ஏழு ஆண்டுகளுக்கு மேல் உள்ள தென்னை, மா, கொய்யா, சப்போட்டா, வாழை, எலுமிச்சை மற்றும் காய்கறி பயிர்களுக்கு பொருந்தும்.

பயனாளி தேர்வு எப்படி

நில ஆவணம் பயனாளி பெயரில் இருக்க வேண்டும். குத்தகை நிலமாக இருப்பின் விவசாயி ஏழு ஆண்டுகளுக்கு முறையாக பதிவு செய்யப்பட்ட குத்தகை ஆவணம் வைத்திருக்க வேண்டும். கூட்டுப்பட்டாவாக இருப்பின் விவசாயி, வி.ஏ.ஓ.,விடம், அவருக்கு சொந்தமான நில பரப்பிற்கு சான்றிதழ், கூட்டு பட்டாதாரர்களிடம் இருந்து ஆட்சேபனை இல்லா சான்றும் பெற்றிருக்க வேண்டும்.

கோயில் நிலமாக இருந்தால் பயனாளியின் பெயரில் கோயில் குத்தகை ஒப்பந்தம் (அடவோலை) இருக்க வேண்டும். சிறு, குறு விவசாயியாக இருப்பின் தலா ஒன்று, இரண்டு எக்டேர் வரையிலும், இதர விவசாயிகளுக்கு ஐந்து எக்டேர் வரை மானியம் வழங்கப்படும்.

கூட்டுறவு, குழு பண்ணையங்கள், கூட்டுறவு சங்கங்கள், சுய உதவிக்குழு, பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள், அரசு சாரா நிறுவனங்கள் திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம். தேர்வு செய்யப்பட்ட சிறு, குறு விவசாயிகளில் குறைந்தது 30 சதவிகிதம் பெண் விவசாயிகளாக இருக்க வேண்டும்.

தொடர்புக்கு 94430 67227.

- எம்.பெரியசாமி

பொறியாளர், உடுமலை.






      Dinamalar
      Follow us