sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

கறிக்கோழி பண்ணையம் செய்வதற்கான நவீன யுத்திகள்

/

கறிக்கோழி பண்ணையம் செய்வதற்கான நவீன யுத்திகள்

கறிக்கோழி பண்ணையம் செய்வதற்கான நவீன யுத்திகள்

கறிக்கோழி பண்ணையம் செய்வதற்கான நவீன யுத்திகள்


PUBLISHED ON : டிச 26, 2012

Google News

PUBLISHED ON : டிச 26, 2012


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கறிக்கோழி பண்ணையம் என்பது குடும்ப வருவாயைப் பெருக்க, வேலையில்லா பட்டதாரிகளால் செய்யப்படும் ஒரு லாபகரமான தொழிலாகும். இந்தத் தொழில் 1968ம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப் பட்டது. ஒவ்வொரு ஆண்டும் கறிக்கோழி உற்பத்தி 15 விழுக்காடுகள் அளவிற்கு அதிகரிக்கிறது. 1981ம் ஆண்டில் 31 மில்லியன்களாக இருந்த கறிக்கோழிகளின் எண்ணிக்கை 1995ம் ஆண்டில் 300 மில்லியன்களானது. இன்று, உலகிலேயே மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 1.9 பில்லியன்களுக்கு மேல் கறிக்கோழிகள் உற்பத்தியாகிறது.

கறிக்கோழி குஞ்சுகள் கொள்முதல்:



அதிக லாபம் பெற, நல்ல உடல்நலம் பெற்ற பெற்றோர் வம்சாவழி வந்த குஞ்சுகளை வாங்குவதில் கவனம் செலுத்த வேண்டும். அனைத்து குஞ்சுகளும் ஒரே மாதிரியான உடல் அமைப்புடன் இருக்க வேண்டும். அவை சுறுசுறுப்பாகவும், எவ்வித உடல் குறைபாடுகள் இல்லாததாகவும் காணப்பட வேண்டும். முடிந்தவரை நம்பிக்கையான குஞ்சு பொரிப்பகத்தில் இருந்து குஞ்சுகள் பெறவேண்டும். ஏனெனில், அப்போதுதான் 4 முதல் 5 வாரத்திற்குள் 1.8 - 2 கிலோ தீவனத்தை உட்கொண்டு 1.5 கிலோ உடல் எடை அடைய முடியும். அதாவது தீவன மாற்றுத்திறன் விகிதம் 1.8 : 1.0 என்ற அளவை எட்ட முடியும்.

கொட்டகை மேலாண்மை:



கொட்டகைகளின் முக்கிய கடமை என்னவென்றால் அவை கோழிகளை மழை, குளிர், வெப்பம், கடும் காற்று, மோசமான வானிலை மற்றும் மற்ற பிராணிகளிடமிருந்து காப்பதே ஆகும். ஒரு கொட்டகையை கட்ட திட்டம் தீட்டும்போது, இடத்தை தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். கொட்டகை அமையவுள்ள இடம் நன்கு மேட்டுப் பாங்காக இருப்பது நல்லது. கொட்டகை கிழ-மேற்கு திசையில் கட்டவேண்டும். இரண்டு கொட்டகைக்கு இடையில் குறைந்தபட்சம் 30 அடி இடைவெளி இருப்பது நல்லது. பொதுவாக ஒரு கோழிக்கு 0.75 - 1.00 சதுர அடி இடம் தேவைப்படும். நல்ல காற்றோட்டத்திற்காக குறைந்தது இரண்டு ஜன்னல்களாவது கொட்டகையின் ஒவ்வொரு பக்கத்திலும் இருக்க வேண்டும்.

கூளம் மேலாண்மை:



கறிக்கோழி வளர்ப்பில் கூளம் எனப்படும் பொருள் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. பெரும்பாலும் உபயோகப்படுத்தப் படும் கூளப் பொருட்கள் எது வென்றால், அரிசி, உமி, மரத்தூள், மரச்சீவல், கடலைப் பொட்டு, உலர்ந்த புல், கோதுமை வைக்கோல் போன்றவை களாகும். கூளம் நன்கு உலர்ந்ததாகவும் பூஞ்சை இல்லா மலும் இருக்க வேண்டும். கூளம் பராமரிப்பில் நமது முக்கிய கடமை என்னவென்றால், அதன் ஈரப்பதம் 20-30 விழுக்காடுகளுக்கு மிகாமல் பார்த்துக் கொள்வதே ஆகும். ஈரப்பதம் அதிகமானால் அதுவே பல இன்னல்களுக்கு வழிவகுத்துவிடும். அவற்றில் ஒன்று ரத்தக்கழிச்சல் நோய் ஆகும். இதன் கிருமி ஈரப்பதம் அதிகமுள்ள கூளத்தில் வளரக்கூடும் தன்மை பெற்றதாகும். எனவே, எந்த நேரத்திலும் கூளத்தை உலர்ந்த நிலையிலேயே பராமரிக்க வேண்டும். பெரிய கட்டிகளாக காணப்படும் கூளம் இருப்பின், உடனடியாக அப்புறப்படுத்தி அதற்கு மாறாக புதிய உலர்ந்த, சுத்தமான கூளத்தைப் போடவேண்டும். (தகவல்: டாக்டர் ப.வாசன், இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை உணவியல் துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு, போன்: 94446 94530).

கே.சத்தியபிரபா, உடுமலை.






      Dinamalar
      Follow us