sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

நவீன தொழில்நுட்பம்

/

நவீன தொழில்நுட்பம்

நவீன தொழில்நுட்பம்

நவீன தொழில்நுட்பம்


PUBLISHED ON : ஜூலை 04, 2012

Google News

PUBLISHED ON : ஜூலை 04, 2012


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறுகியகால நெல் ரகங்கள் - திருந்திய நெல் சாகுபடி நுட்பங்கள்: ஆடுதுறை 36: வயது 110 நாட்கள், எக்டருக்கு 6 டன் விளைச்சல். நடுத்தர சன்ன வெள்ளைநிற அரிசி, குருத்துப் பூச்சிக்கும் குலைநோய்க்கும் ஓரளவு எதிர்ப்புத்தன்மை, தமிழகமெங்கும் சாகுபடி.

ஆடுதுறை 37: வயது 105 நாட்கள், எக்டருக்கு 5-6 டன் விளைச்சல், குட்டை பருமனுடன் வெள்ளை நிற அரிசி, பூச்சி நோய்களுக்கு ஓரளவு எதிர்ப்பு சக்தி கொண்டது.

ஆடுதுறை 42: 115 நாட்கள், 6-6.5 டன் மகசூல், நீண்ட சன்ன வெள்ளைநிற அரிசி, சொர்ணவாரி, குறுவை, கார் பருவங்களுக்கு ஏற்றது. தமிழகமெங்கும் பயிரிடலாம்.

ஆடுதுறை 43: 105-110 நாட்கள், விளைச்சல் எக்டருக்கு 6000 கிலோ, மத்திய சன்ன வெள்ளை அரிசி.

ஆடுதுறை 45: 105-115 நாட்கள் வயதுடையது. மகசூல் 6000 கிலோ. மத்திய சன்ன அரிசி, 0.5 சதவீதம் முழு அரிசி காணும் திறனுடையது. ஆனைக்கொம்பனுக்கு எதிர்ப்புத்திறன் கொண்டது. புகையானுக்கும், குருத்துப்பூச்சிக்கும் மிதமான எதிர்ப்புத்திறன் கொண்டது.

ஆடுதுறை 47: 115-118 நாட்கள். மகசூல் 7 டன், மத்திய சன்ன வெள்ளை அரிசி, சொர்ணவாரி, கார், குறுவை, நவரை பட்டங்களுக்கு ஏற்றது. இலைக் கருகல், துங்ரோ நோய்க்கு எதிர்ப்புசக்தி கொண்டது.

ஆடுதுறை 48: 95 நாட்கள் வயதுடையது. மகசூல் 4.8 டன்/எக்டர். நீண்ட சன்ன வெள்ளை அரிசி, தண்ணீர் பற்றாக்குறை காலங்களில் நேரடி விதைப்பிற்கு ஏற்றது. தஞ்சை, நாகை மாவட்டங்களில் பின் குறுவைக்கு ஏற்றது. குருத்துப்பூச்சி, இலை மடக்குப்புழுவிற்கு எதிர்ப்புத்திறன் கொண்டது.

ஆடுதுறை வீரிய ஒட்டு: வயது 115 நாட்கள். எக்டருக்கு 8 டன் மகசூல். நீண்ட சன்ன வெள்ளை அரிசி. வயல் நிலையில் குருத்துப்பூச்சி, இலை சுருட்டுப் புழுவிற்கு எதிர்ப்புத்திறன் கொண்டது.

டி.கே.எம்.12: 115-120 நாட்கள் வயது. காஞ்சிபுரம், திருவள்ளூர், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ஏற்றது. ஜூலை - ஆகஸ்ட் - செப்டம்பர் ஆகிய மாதங்களில் மானாவாரியில் நேரடி விதைப்புக்கு ஏற்றது. வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. மகசூல் எக்டருக்கு 3 டன்.

ஏ.எஸ்.டி.16 (அம்பை 16): 115 நாட்கள் வயதுடையது. விளைச்சல் 5.5 டன் / எக்டர். புகையானுக்கு எதிர்ப்புசக்தி கொண்டது.

ஏ.எஸ்.டி.20 (அம்பை 20): வயது 110-115 நாட்கள். மகசூல் ஏக்கருக்கு 6-6.5 டன். நெல் நீண்ட சன்னம், அரிசி வெள்ளை, பல நோய்களுக்கும் பூச்சிகளுக்கும் எதிர்ப்பு சக்தி கொண்டது.

மதுரை 5(என் டியு 5): வயது 95-100 நாட்கள். மகசூல் எக்டருக்கு 5 டன், நேரடி விதைப்புக்கு மிகவும் ஏற்றது. குறிப்பாக மதுரை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், விருதுநகர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் புழுதிக்கால் சாகுபடிக்கு ஏற்றது. நெல் நடுத்தர சன்னம். பல நோய்களையும் பூச்சிகளையும் தாங்கி வளரக்கூடியது. கார், குறுவை, சொர்ணவாரி, நவரை பட்டங்களில் பயிரிட ஏற்றது. நாற்று விட்டு நடுவதற்கும் ஏற்றது.

பிஎம்கே (ஆர்) 4 (அண்ணா4): குறுகிய கால வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. வயது 100-105 நாட்கள். நேரடி விதைப்பில் எக்டருக்கு 3.7 டன் மகசூல், மானாவாரியில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் நேரடி விதைப்புக்கு ஏற்றது.

திருந்திய நெல் சாகுபடியின் முக்கிய நுட்பங்கள்:

* 14 நாள் வயதுடைய வாளிப்பான நாற்றுக்களை நடுதல். * குத்துக்கு ஒரு நாற்று அதிக இடைவெளிவிட்டு சதுர நடவு (25 து 25 செ.மீ.). * ரோட்டரி, கோனோ வீடர் மூலம் களைகளை அமுக்கி சேற்றை கலக்குதல். * நீர் மறைய நீர் கட்டி பாசன நீரின் அளவைக் குறைத்தல். * பச்சை வண்ண அட்டை மூலம் தழைச்சத்தை நிர்வகித்தல். * ஒருங்கிணைந்த நெற்பயிர் நிர்வாகத்தில் அடிப்படை தேவையான வீரிய இளம் நாற்றுக்களை 14 நாட்கள் உற்பத்தி செய்வதற்கு வேண்டிய உழவியல் நுட்பங்களை அறிதல் (தகவல்: முனைவர் த.ஜெயராஜ், முனைவர் ரா.சரஸ்வதி, முனைவர். க.சோளன், தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம், ஆடுதுறை-612 101. போன்: 0435-247 2098)

-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்






      Dinamalar
      Follow us