sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

சிறுதொழில் துவங்க சிறுதானிய உணவுப்பண்டங்கள்

/

சிறுதொழில் துவங்க சிறுதானிய உணவுப்பண்டங்கள்

சிறுதொழில் துவங்க சிறுதானிய உணவுப்பண்டங்கள்

சிறுதொழில் துவங்க சிறுதானிய உணவுப்பண்டங்கள்


PUBLISHED ON : ஜூலை 04, 2012

Google News

PUBLISHED ON : ஜூலை 04, 2012


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரிசி, கோதுமையைப் போலவே சிறு தானியங்களை உபயோகித்து வியாபார ரீதியில் பலவகையான உணவுப் பண்டங்களைத் தயாரிக்கலாம். ஆவியில் வேகவைத்து தயாரிக்கும் பண்டங்களான இடியாப்பம், புட்டு, கொழுக்கட்டை மற்றும் சோளமாவு, கேழ்வரகு மாவு, கம்பு மாவு, திணை மாவு போன்றவற்றிலிருந்து இனிப்பு வகைகளான அதிரசம், பணியாரம், லட்டு, கேசரி, பாயசம், சத்துமாவு உருண்டை மற்றும் புட்டிங் ஆகிய பண்டங்களைத் தயாரிக்கலாம். கார வகைகளான முறுக்கு பக்கோடா, அடை, உப்புமா மற்றும் அடுமனைப் பொருட்களான கேக், பிஸ்கட் மற்றும் ரொட்டி வகைகளையும் தயாரிக்கலாம்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த சிறுதானியங்களை அன்றாட உணவிலும் மதிப்புக்கூட்டி வியாபார ரீதியாகவும் உபயோகப்படுத்தும்போது அவற்றின் தயாரிப்பு விலை குறைவது மட்டுமல்லாமல் ஊட்டச்சத்து மிகுந்த உணவுப் பண்டங்கள் தயாரித்து விற்பனை செய்ய முடியும்.

சிறுதானியங்களிலிருந்து இணை உணவு: கோதுமை, சோளம், மக்காச்சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சாமை, குதிரைவாலி, பார்லி மற்றும் ஜவ்வரிசியோடு பாசிப் பயறு, கொண்டைக்கடலை, பாதாம், முந்திரி, ஏலக்காய் ஆகியவற்றைச் சேர்த்து இணை உணவு தயாரிக்கலாம். சிறுதானியங்கள் மற்றும் பயறுவகைகளை கல்நீக்கி சுத்தம் செய்து வெயிலில் காயவைத்து, 12 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, ஈரத்துணியில் கட்டி மிதமான வெப்பநிலையில் 48 மணி நேரம் வைக்கவும். முளைத்த தானியங்கள் மற்றும் பயறுவகைகளை வெயிலில் நன்கு காயவைத்து, மிதமான சூட்டில் வறுக்கவும். இவ்வாறு தயார் செய்த தானியங்களை மில்லில் மாவாகத் திரிக்கும்பொழுது பாதாம், முந்திரி, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து மாவாக்கவும். தயாரித்த மாவை பாலிதீன் பை அல்லது டப்பாக்களில் சேமித்து தினமும் காலை நேரங்களில் குழந்தைகள், பருவப்பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வயதானவர்களுக்கு கூழாக தயாரித்து கொடுக்கலாம்.

சிறுதொழில் தொடங்கத் தேவை யானவை: சிறுதானிய உற்பத்தியாளரே மதிப்பூட்டப்பட்ட சிறுதானிய உணவுப் பண்டங்கள் தயாரிக்கும் முறையை ஒரு குடிசைத் தொழிலாக மேற்கொண்டு வருவாயைப் பெருக்கலாம். அல்லது உற்பத்தியாளரிடமிருந்து சிறுதானியங்களை வாங்கி உணவுப் பண்டங்களை தயாரித்து விற்பனை செய்யலாம். தானே உற்பத்தி செய்து இத்தொழிலை மேற்கொண்டால் நல்ல லாபத்தைத் தரும். ஒரு கிலோ பலதானியக்கலவை பொடி தயாரிக்க ஆகும் செலவு ரூ.30-40 வரை ஆகும். கடையில் இதை ரூ.80 முதல் 120 வரை விற்பனை செய்யலாம். இந்த தொழிலுக்கு அதிக முதலீடு தேவையில்லை. குறைந்த முதலீட்டில் நிறைய லாபம் தரும் தொழில்களில் இது முதன்மையானது என்றே சொல்லலாம்.

தொழில் துவங்க தேவையான பொருட்கள்: ஊறவைக்க பாத்திரங்கள், வறுத்தெடுக்க வாணலி மற்றும் கரண்டிகள், மாவை சேமிக்க எவர்சில்வர் அல்லது பிளாஸ்டிக் மூடியுடன் கூடிய வாளி, எடைபோடும் மிஷின், லேபிள் போட்ட பிளாஸ்டிக் கவர்கள், சீல் செய்ய கவர் போன்றவைக்கு ரூ.5000 முதல் ரூ.1000 வரை உள்ள முதலீடு போதுமானது. இத் தொழிலை பள்ளி, கல்லூரி, அலுவல கங்கள் போன்ற உணவகங்களிலும் நடத்தலாம். இத்தொழில் துவங்க மூலதனம் ரூ.10,000 தேவைப்படும். தினசரி சராசரியாக 1000 ரூபாய்க்கு பண்டங்கள் தயாரித்து விற்பனை செய்தால் மாதந்தோறும் ரூ.30,000க்கும் மேல் லாபம் கிடைக்கும். இவ்வாறு சிறுதானியங்களிலிருந்து மதிப்புக் கூட்டிய உணவுப் பண்டங்கள் தயாரித்து விற்பனை செய்து குடும்ப வருமானத்தைப் பெருக்குவதுடன் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பையும் அதிகரிக்கலாம்.

முனைவர் பெ.க.தேன்மொழி,

உதவிப்பேராசிரியர்,

முனைவர் வெ.பழனிச்சாமி,

இணைப்பேராசிரியர் மற்றும்

தலைவர்,

வேளாண் அறிவியல் நிலையம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ

அறிவியல் பல்கலைக்கழகம்,

குன்றக்குடி-630 206.






      Dinamalar
      Follow us