sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

நவீன தொழில்நுட்பம்

/

நவீன தொழில்நுட்பம்

நவீன தொழில்நுட்பம்

நவீன தொழில்நுட்பம்


PUBLISHED ON : ஜூலை 18, 2012

Google News

PUBLISHED ON : ஜூலை 18, 2012


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சம்பங்கி (பூலே ரஜினி) வளர்ப்பு முறை: புனேவிலிருந்து கொண்டுவரப்பட்டு தமிழகத்தில் கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள பச்சை பெருமாள் பட்டி கிராமத்தில் பயிரிட்டு அமோக விளைச்சல் கண்டு உள்ளார்கள். நன்கு ஆழமாக 3 முறை உழவு, பின் 15 டிராக்டர் மக்கிய தொழு உரம், ஒரு டன் மண்புழு உரம் இட்டு நிலத்தை பண்படுத்த வேண்டும். ஒரு ஏக்கருக்கு விதை பெரிய கிழங்காக இருந்தால் 400-500 கிலோ தேவை. விதைநேர்த்தி செய்தபின் விதை நடவேண்டும். விதைநேர்த்தி செய்ய ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் பெவிஸ்டின் கலந்து விதையை அதில் போட்டபின் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியாவை பசை போல் செய்து விதையை அதில் கலந்து நிழலில் உலர்த்தி நிலத்தில் நன்கு தண்ணீர் பாய்ச்சி, பின் நடவு செய்ய வேண்டும்.நடவு செய்த 4 மாதத்தில் பூ வர தொடங்கும். (பெரிய கிழங்காக இருந்தால்) கிழங்கின் தன்மையைப் பொறுத்து பூ பூக்கும் காலம் அமையும். மாதம் ஒரு முறை 4 மூடை 19:19:19 மற்றும் கடலை புண்ணாக்கு 10 கிலோ உரமாக இடவேண்டும். இந்த ரகத்திற்கு உரம் அதிகம் தேவை. எனவே நிலத்தின் தன்மையைப் பொறுத்து உரம் இடலாம். இந்த ரகத்தில் ஒரு செடியிலிருந்து ஒரே சமயத்தில் 3-7 தண்டுகள் வரும். ஒரு தண்டில் 50-80 பூக்கள் பூக்கும். வருடம் 2 முறை தொழு உரம் இடவேண்டும். களையை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். ஒரு ஏக்கரில் அதிகபட்சம் 102 கிலோ வரை பூ எடுக்கலாம். சராசரியாக ஒரு ஏக்கரில் 50-70 கிலோ வரை கிடைக்கும். மேலும் விபரங்களுக்கு: பி.ராமர், 97157 29713.

பைக்கோலின்: 'லின் பிளாண்டோ' பிரைவேட் நிறுவனம் நீலப்பச்சைப்பாசியை ஒப்பந்த முறையில் விவசாயம் செய்துவருகிறது. இந்நிறுவனம் கடல்பாசி பயிர் செய்வதில் கடந்த 12 வருடங்களுக்கும் மேலாக அனுபவம் பெற்ற வல்லுனர்கள் மூலம் கடல் தாவரங்களை வளர்த்து வருகிறது.பைக்கோலின் என்பது இயற்கையான சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒப்பந்த முறையில் பயிர் செய்யப்பட்ட கடல் தாவரத்திலிருந்து தயார் செய்யப்பட்ட உரம். இதில் பேரூட்ட, நுண்ணூட்டச் சத்துக்கள் மற்றும் தாவர வளர்ச்சி ஊக்கிகள் நிறைந்து காணப்படுகிறது. இது அனைத்து வகையான பயிர்களுக்கும் திரவ வடிவிலான உரமாக பயன்படுகிறது. பைக்கோலின் பயிர்களின் உற்பத்தியை 13 சதத்திலிருந்து 40 சதம் வரை உற்பத்தியை பெருக்க உதவுகிறது. கரும்பு, கத்தரிக்காய், தக்காளி, உருளை, மிளகாய், சோளம், நெல், கோதுமை, சோயாபீன்ஸ், நிலக்கடலை, மஞ்சள், ஏலக்காய், கோலியஸ், ரோஜா மற்றும் செவ்வந்தி பயிர்களில் பயன்படுத்தலாம்.பைக்கோலினை ஒரு சதம் முதல் 2 சதம் வரை தண்ணீரில் கரைத்து விதைநேர்த்தி செய்ய வேண்டும். தெளிப்பான் மற்றும் சொட்டுநீர் பாசனத்திற்கு 2 சதம் முதல் 3 சதம் வரை தண்ணீரில் கரைத்து பயன்படுத்தலாம். வேறு எந்த வேதி உரங்களுடனும் சேர்த்து பயன்படுத்தக்கூடாது. பைக்கோலின் பற்றிய விரிவான விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: லின் பிளான்டோ பிரைவேட் லிமிடெட், 66ஏ, மெயின்ரோடு, மாடக்குளம், மதுரை-625 003. 94431 42107, 94875 38573 (தகவல்: க.தி.செல்வ விநாயகம் மற்றும் முனைவர் வெ.சுந்தரராஜன், நவீன வேளாண்மை, ஜூன் 2012)

தென்னை ராம்கங்கா: கையால் பறிக்கும் உயரத்தில் காய்கள், இரண்டரை ஆண்டிலேயே காய்ப்பு, மரத்திற்கு 300 இளநீர் காய்கள். நாற்றுக்கள் வாங்கவும், ஆலோசனைகள் பெறவும் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: 'நாசுவன்பாளையம், வெங்கிட்டாபுரம் போஸ்ட், பல்லடம், திருப்பூர்-641 664.

98422 62166, 97153 71717. போன்: 04255-252 166.

-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்






      Dinamalar
      Follow us