sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

நவீன தொழில்நுட்பம்

/

நவீன தொழில்நுட்பம்

நவீன தொழில்நுட்பம்

நவீன தொழில்நுட்பம்


PUBLISHED ON : டிச 12, 2012

Google News

PUBLISHED ON : டிச 12, 2012


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென்னையில் சொட்டு நீர்வழி உர மேலாண்மை: தென்னை நீண்டகால பயிராக இருப்பதாலும் தொடர்ந்து விளைச்சல் கொடுப்பதாலும் வருடம் முழுவதும் நீர் உரத்தேவை ஏற்படுகிறது. மரம் ஒன்றுக்கு தேவைப்படும் தழை, மணி, சாம்பல் சத்துக்கள் 560-320-1200 கிராம் ஆகும்.

உரங்கள் - அளவுகள் (கிலோகிராம்/எக்டர்)

யூரியா - 74 கி.கி (மரம் ஒன்றுக்கு 0.5கிலோ)

சூப்பர் பாஸ்பேட் - 312 கி.கி(மரம் ஒன்றுக்கு 2 கிலோ)

மியூரியேட் ஆப் பொட்டாஷ் - 416 கிலோ கிராம் (மரம் ஒன்றுக்கு 2.6 கிலோ)

நான்கு ஆண்டு, அதற்கு மேற்பட்ட மரங்களுக்கான உர அளவுகள்

பயிர் வளர்ச்சி நிலை - நீர்வழி உரமிடுவதற்கான சரியான இடைவெளி - தேவையான உரங்கள் - உரம் இடுதல் எண்ணிக்கை - அளவு (கிலோ) ஒரு முறை)

ஜூலை-ஆகஸ்ட் - வாரம் ஒரு முறை - 13-00-45 - 8 முறை - 13

ஜூலை-ஆகஸ்ட் - வாரம் ஒரு முறை - யூரியா - 8 முறை - 2.3

ஆகஸ்ட்-நவம்பர் - வாரம் ஒரு முறை - 13-00-45 - 8 முறை - 2.3

ஜனவரி - பிப்ரவரி - வாரம் ஒரு முறை - 13-00-45 - 8 முறை - 13

ஜனவரி - பிப்ரவரி - வாரம் ஒரு முறை - யூரியா - 8 முறை - 2.3

ஏப்ரல்-மே - வாரம் ஒரு முறை - 13-00-45 - 8 முறை - 13.00

ஏப்ரல்-மே - வாரம் ஒரு முறை - யூரியா - 8 முறை - 2.3

சூப்பர் பாஸ்பேட்டினை அடியுரமாக ஒரு எக்டருக்கு 312 கிலோ என்ற விகிதத்தில் நான்கு சம பாகங்களாக பிரித்து நான்குமுறை இடவேண்டும்.

இளம் மரங்களுக்கான உர அளவுகள்:



நட்ட 3 மாதத்திற்குபிறகு - 10ல் ஒரு பங்கு அளவு, இரண்டு ஆண்டு மரத்திற்கு - 3ல் ஒரு பங்கு அளவு, மூன்று ஆண்டு மரத்திற்கு - 3ல் 2 பங்கு அளவு, நான்கு ஆண்டு மரத்திற்கு - முழு அளவு.

உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா மற்றும் வேம் ஆகியவற்றை 50 கிராம் என்ற அளவில் எடுத்து தேவையான அளவு தொழு உரத்துடன் கலந்து 6 மாதத்திற்கு ஒரு முறை இடவேண்டும்.

தென்னை ஊக்க மருந்து:



கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சென்னையில் குரும்பை உதிர்வதைத் தடுக்கவும் காய்களின் அளவை அதிகரிக்கவும் தென்னை ஊக்கமருந்தினை தயாரித்துள்ளது.

இதனை ஆண்டிற்கு இரண்டு முறை 6 மாத இடைவெளியில் மரம் ஒன்றுக்கு 200 மிலி என்ற அளவில் 1:4 என்ற விகிதத்தில் தண்ணீருடன் கலந்து வேர் மூலம் செலுத்தப்படுகிறது.

இலைகளில் பச்சையத்தின் அளவு அதிகரித்தல், ஒளிச்சேர்க்கைத் திறனை அதிகரித்தல், குரும்பை உதிர்வதைத் தடுத்தல், காய்களின் எண்ணிக்கை, அதன் அளவை அதிகப்படுத்துதல், காய்களின் விளைச்சலை 20 சதவீதம் வரை அதிகரிக்கச் செய்தல், வாழ்நாள் மரத்தின் வீரியத்தை அதிகப்படுத்துதல், நோய், பூச்சி, தட்பவெப்ப காரணிகளை எதிர்கொள்ளும் திறன் போன்றவை இதன் சிறப்பியல்புகளாகும். (தகவல்: ந.சுகந்தி, மா.சகாதேவன், ச.சுரேஷ்குமார், ஸ்ரீ அவிநாசிலிங்கம் வேளாண்மை அறிவியல் நிலையம், விவேகானந்தபுரம்-641 113, காரமடை வட்டம், கோயம்புத்தூர். போன்: 04254-284 223)

-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்






      Dinamalar
      Follow us