sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

மானாவாரி நிலக்கடலை - ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

/

மானாவாரி நிலக்கடலை - ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

மானாவாரி நிலக்கடலை - ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

மானாவாரி நிலக்கடலை - ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு


PUBLISHED ON : டிச 12, 2012

Google News

PUBLISHED ON : டிச 12, 2012


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நிலக்கடலையைத் தாக்கும் பூச்சிகளில் முக்கியமானவை சிவப்புக் கம்பளிப்புழு, படைப்புழு, தத்துப்பூச்சி மற்றும் சுருள்பூச்சி ஆகியனவாகும். பொருளாதார சேதநிலை 10 சதவீதத்திற்கு அதிகமாக இருந்தால் கீழ்க்கண்டபடி பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அவசியம் இருந்தால் மட்டுமே பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க வேண்டும்.

சிவப்பு கம்பளிப்புழு:



* கோடை மழைக்கு முன் வரப்புகளிலும் நிழலான இடங்களிலும் மண்ணில் புதைந்துள்ள கூட்டுப்புழுக்களை உழவு செய்து வெளிக்கொணர்ந்து சேகரித்து அழிக்கவும். * மானாவாரிப் பயிர்களில் விதைப்புக்கு பிறகு மழைக்குப்பின் விளக்குப்பொறி அல்லது தீப்பந்தம் வைத்து தாய் அந்துப்பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும்

* துவரை மற்றும் தட்டைப்பயிர்களை ஊடுபயிர் செய்வதால் இளம்பருவ புழுக்கள் உள்ள கண்ணாடி போன்று தாக்கப்பட்ட இலைகளை சேகரித்து அழிக்கவும். * அதிக தாக்குதல் உள்ள காலங்களில் தாக்கப்பட்ட வயல்களைச் சுற்றி 30 செ.மீ. ஆழம் மற்றும் 25 செ.மீ. அகலத்தில் செங்குத்தாக குழிகள் அமைத்து புழுக்கள் பாதிக்கப்பட்ட வயல்களிலிருந்து பரவுவதைத் தடுக்கவும். * சிவப்புக் கம்பளிப் புழுக்களை கட்டுப்படுத்த குவினால் பாஸ் 2.5 மிலி (அ) குளோர்பைரிபாஸ் 3 மிலி (அ) ட்ரைசோபாஸ் 2 மிலி/லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

என்.பி.வி. நச்சுயிரியை தெளித்தல் ஒரு ஏக்கருக்கு 200 மிலி என்.பி.வி. நச்சுயிரி (300 புழுக்களை ஊறவைத்து பெறப்படும் நச்சுயிரிக் கரைசல்) மற்றும் 100 மிலி ஒட்டும் திரவம் அல்லது ட்ரைட்டான் சேர்த்து 150 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை நேரங்களில் தெளிக்கவும்.

படைப்புழு அல்லது வெட்டுப்புழு: * ஆமணக்குப் பயிரை நிலக்கடலைப் பயிரைச் சுற்றி வரப்பு பயிராகவோ அல்லது ஊடுபயிராகவோ பயிரிட்டு பூச்சியின் நடமாட்டத்தைக் கண்காணிக்கலாம். அல்லது பொறிப்பயிராக பயன்படுத்தி தாக்குதலைக் குறைக்கவும்.

* விளக்குப்பொறி அல்லது இனக்கவர்ச்சிப்பொறிகளை வயலில் பொருத்தி அந்துப்பூச்சி வெளிவருவதை கண்காணிக்கவும்.

* முட்டைக் குவியல்களைச் சேகரித்து அழிக்கவும்.

* ஆமணக்கு, தட்டைப்பயிர் மற்றும் நிலக்கடலைகளின் கண்ணாடி போன்று தாக்கப்பட்ட இலைகள் தென்பட்டஉடன், இலைகளில் உள்ள புழுக்களைச் சேகரித்து அழிக்கவும்.

* படைப் புழுக்களை கட்டுப்படுத்த ஸ்பைனோசாடு 0.4மி.லி. (அ) புரோபனோபாஸ் 2 மி.லி. / லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

* ஒரு ஏக்கருக்குத் தேவையான நச்சுணவு உருண்டைகளைத் தயார் செய்து பயன்படுத்தலாம். அரிசித்தவிடு 5 கிலோ, வெல்லம் 0.5 கிலோ மற்றும் கார்பரில் (50 சதம்), நனையும் தூள் 0.5 கிலோ ஆகிய இம்மூன்றையும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து (3 லிட்டர்) சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். இந்த நச்சுணவு உருண்டைகளைத் தயார் செய்தவுடன், வயலைச் சுற்றிலும் வரப்பு ஓரங்களிலும், வயலில் தெரியும் வெடிப்பு மற்றும் பொந்துகளிலும் மாலை வேளைகளில் வைத்து புழுக்களைக் கவர்ந்து அழிக்கவும்.

* என்.பி.வி. நச்சுயிரியை ஏக்கருக்கு 200 மிலி என்ற அளவில் வெல்லம் (1.0 கிலோ/ஏக்கர்) மற்றும் டீப்பாலுடன் (100மிலி/ஏக்கர்) சேர்த்து 150 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை நேரங்களில் தெளிக்க வேண்டும்.

நிலக்கடலையை தாக்கும் நோய்கள்:



நிலக்கடலையைத் தாக்கும் நோய்களில் முக்கியமானவை வேரழுகல், துரு மற்றும் இலைப்புள்ளி நோய்களாகும்.

துரு நோய்:



ஒரு ஏக்கருக்கு மேன்கோசெப் 400கி (அ) குளோரோதலோனில் 400கி (அ) டிரைடிமார்ப் 200கி நோயின் தீவிரத்தைப் பொறுத்து, 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்கவும்.

முன்பருவ மற்றும் பின்பருவ இலைப்புள்ளி நோய்:



ஒரு ஏக்கருக்கு கார்பன்டசிம் 200 கிராம் (அ) மேன்கோ செப் 400கிராம் (அ) குளோரோ தலோனில் 400 கிராம், பூசணக் கொல்லியை தெளிக்கவும். தேவைஎனில் பதினைந்து நாட்கள் கழித்து மீண்டும் ஒருமுறை தெளிக்கவும்.

துரு மற்றும் இலைப்புள்ளி நோய்:



ஒரு ஏக்கருக்கு கார்பன்டாசிம் 100 கிராம் + மேன்கோசெப் 400 கிராம் (அ) குளோரோதலோனில் 400 கிராம் தெளிக்கவும். தேவையெனில் பதினைந்து நாட்கள் கழித்தும் மீண்டும் ஒருமுறை தெளிக்கவும்.

வேரழுகல் நோய்



* உயிரியல் முறை: ஒரு ஏக்கருக்கு சூடோமோனாஸ் புளூரசன்ஸ் 1 கிலோவுடன் 20 கிலோ நன்கு மக்கிய தொழு உரம் (அ) மணல் இடுதல்.

* பூஞ்சாணக்கொல்லிகள்: நோய் தென்படும் இடங்களில் கார்பன்டாசிம் ஒரு கிராம்/லிட்டர் என்ற அளவில் தெளிக்கவும். புரபகனோசோல் 2 கிராம்/கிலோ விதைக்கு என்ற விகிதத்தில் கலந்து விதைக்கும் முன் விதைநேர்த்தி செய்ய வேண்டும்.

பா.கண்ணன், ப.பாலசுப்பிரமணியன், ப.அருணாசலம், ஞா.பிரபுகுமார்

மானாவாரி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், செட்டிநாடு-630 102.

போன்: 04565-283 080.






      Dinamalar
      Follow us