sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

நவீன தொழில்நுட்பம்

/

நவீன தொழில்நுட்பம்

நவீன தொழில்நுட்பம்

நவீன தொழில்நுட்பம்


PUBLISHED ON : ஜன 08, 2014

Google News

PUBLISHED ON : ஜன 08, 2014


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரம் சார்ந்த ஒப்பந்தமுறை சாகுபடி: ஒப்பந்தமுறை சாகுபடி விவசாயத்துறையிலும், தோட்டக்கலைத்துறையிலும் அறிமுகப்படுத்தப்பட்டு மிகப்பெருமளவில் வெற்றியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தொழிற்சாலை சார்ந்த மர ஒப்பந்தமுறை சாகுபடி அறிமுக அளவிலேயே இருந்து வந்தது. வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் காகிதம் மற்றும் தீக்குச்சி மரங்களின் உயர்ரக மரங்களை கண்டறிந்து அவற்றை சான்றாக உருவாக்கி வருகின்றன. அவற்றை தொழிற்சாலைகளுடன் இணைந்து மாதிரி தோட்டங்களை உருவாக்கியுள்ளது. அதன் பலனாக உழவர்கள் அதிக அளவில் ஒப்பந்தமுறை சாகுபடியில் ஈர்க்கப்பட்டு சுமார் 40,000 ஏக்கர் நிலப்பரப்பில் இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் சுமார் 29 மாவட்டங்களில் குறு, பெரு உழவர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்பட்டுள்ளது.

மரம் சார்ந்த ஒப்பந்தமுறை சாகுபடியில் 4 விதமான திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். உழவர்களும், தொண்டு நிறுவனங்களும் பயன்பெறும் வகையில் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

வேளாண் மற்றும் பண்ணைக்காடுகள் திட்டம்: இத்திட்டத்தின் மூலம் உழவர்கள் பயன் பெறலாம் (1 ஏக்கர் வரை). இத்திட்டத்தில் நிலமேம்பாடு, சீர்திருத்தம், மரவளர்ப்பு, மரமேலாண்மை, மர அறுவடை வரை உள்ள அனைத்து செயல்முறைகளும் உழவர்களே தங்கள் செலவில் செய்து முடிக்க வேண்டும்.

இத்திட்டத்தில் கனறக பெருக்க முறையில் உற்பத்தி செய்யப்பட்ட தரமான நாற்றுகளை மானிய விலையில் உழவர்களுக்கு தொழிற்சாலைகள் மூலம் வழங்கப்படும். தொழில்நுட்பங்களை வனக்கல்லூரி அறிவியலர் விவசாயிகளின் நிலங்களுக்கு நேரடியாக சென்று வழங்கி வருகின்றார்கள். மரங்கள் முதிர்ந்த காலத்தில் தொழிற்சாலைகள் தங்கள் சொந்த செலவில் மரங்களை வெட்டி மரங்களுக்கு குறைந்தபட்ச ஆதாரநிலையாக ரூ.2500 முதல் 7500 வரை (மரம் சார்ந்த தொழில் நிறுவனங்களைப் பொருத்து) ஒரு டன்னுக்கு அல்லது அறுவடை காலத்தின் பொழுது சந்தை விலையில் கிடைக்கும்.

மூலதனக்காடுகள்: இத்திட்டம் மரம் சார்ந்த தொழிற்சாலைகளுக்கு தேவையான தரமான மூலப்பொருள்களை உற்பத்தி செய்வதற்கான திட்டமாகும். இந்த திட்டத்தில் வருவாய் பங்கீட்டுத் திட்டம், குத்தகை சாகுபடித் திட்டம் என இரண்டு திட்டங்கள் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டு தொழிற்சாலைகளின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

வருவாய் பங்கீட்டுத் திட்டம்: இத்திட்டத்தில் பங்குபெற குறைந்தது 25 ஏக்கர் நிலவரப்படி ஒரே இடத்தில் பெற்றிருக்க வேண்டும். ஒப்பந்தம் செய்யும் தொழிற்சாலைகளின் நிலமேம்பாடு நெல் அறுவடை வரை உள்ள அனைத்து செலவினங்களையும் ஏற்றுக்கொண்டு மரங்கள் அறுவடை செய்த பின்னும் கிடைக்கும் பருவ நில உரிமையாளர்களுக்கு பங்கீட்டு கொடுக்கின்றது. நீர் ஆதாரம் உள்ள இடங்களுக்கு 40 சதவீதமும், மானாவாரி இடங்களுக்கு 30 சதவீதமும் நில உரிமையாளர்களுக்கு வருவாய் பங்கீடாக வழங்கப்படுகிறது.

குத்தகை சாகுபடி: இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்கள் நிலங்களை மரம் சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கி மரவளர்ப்பில் ஈடுபடலாம். நீர் ஆதாரம் உள்ள இடங்களுக்கு ஒரு ஏக்கருக்கு ஒரு ஆண்டுக்கு ரூ.3000/- மானாவாரி நாட்களுக்கு ரூ.1000/-மும் வழங்கப்படும். குறைந்த ஒப்பந்தமுறை காலமாக சுமார் 6 ஆண்டுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தமுறை சாகுபடி: வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மரம் சார்ந்த தொழில் நிறுவனங்களுடன் இணைந்து ஒப்பந்த மர சாகுபடி முறையை அறிமுகப்படுத்தி வருகின்றது. இவ்வாறு மரப்பயிர்களில் ஒப்பந்தமுறை சாகுபடிக்கு நிறுவனங்களைத் தொடர்புக் கொண்டு பயன்பெறலாம். வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையம் -641 301. போன்: 04254 - 271 502., மரக்கூழ் மர ஒப்பந்த முறை சாகுபடி - போன்: 94425 91411., தீக்குச்சி மர ஒப்பந்தமுறை சாகுபடி - போன்: 93455 24401.,

உயிர் எரிசக்தி மர ஒப்பந்தமுறை சாகுபடி - போன்: 96000 67896., பிளைவுட் மர ஒப்பந்தமுறை சாகுபடி - போன்: 94430 35177. (தகவல்: முனைவர் பெ.துரைராசு முதன்மை வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், த.வே.கழகம், மேட்டுப்பாளையம் - 641 301. போன்: 04254 - 222 010).

- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.






      Dinamalar
      Follow us