
இம் மூலிகையின் பெயர் சுக்கை என்கிற முசுமுசுக்கை. சித்தர்கள் இதனை ''ஆஞ்சநேயர் கை'' என்றழைத்தனர். இதன் இலை காசம், கோழை, சுவாசக் கோளாறுகள், புகைக்கம்மல், ஜலதோஷம் ஆகியவற்றை போக்கும் தன்மையுடையது. பித்தம் அதிகமாவதால் ஏற்படும் இறைப்பு (வீசிங்) கட்டுப்படும்.
இது செம்மண் பூமி மற்றும் கரும்புத் தோட்டங்களில் வளரும். பனிக் காலத்தில் ஏற்படும் சுவாசக் கோளாறுகளையும் நீக்கும் தன்மை உடையது. தலை சுற்றலையும் போக்கும். வல்லாரை கீரையைப் போன்று ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்து மூளையை பலப்படுத்தும். இதன் இலையைப் பறித்து லேசாக இடித்து ரசம் வைத்து தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட பக்கவாதம், பித்த நோய்களைப் போக்கும். இதன் இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து ரசப்பொடி போன்று பயன்படுத்தலாம் (புளி சேர்க்காமல் ரசம் வைக்க வேண்டும்). இதில் சுண்ணாம்புச் சத்து அதிகம் இருப்பதால் எலும்புகள் பலம் பெறும்.
சித்தர்கள் இதனை ''ஆஞ்சநேயர் கை'' என்று அழைத்ததில் இருந்தே இதன் மருத்துவ மகிமையை நாம் அறிந்து கொள்ள முடியும். இதுவும் ஒருவித ''சஞ்சீவிக் கீரை'' ஆகும்.
பி.வி.கனகராஜன்,
உடுமலை. செல்: 96594 56279

