sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

மகாராஜபுரம் பலா ரகம் - அள்ளித்தரும் அமுதசுரபி

/

மகாராஜபுரம் பலா ரகம் - அள்ளித்தரும் அமுதசுரபி

மகாராஜபுரம் பலா ரகம் - அள்ளித்தரும் அமுதசுரபி

மகாராஜபுரம் பலா ரகம் - அள்ளித்தரும் அமுதசுரபி


PUBLISHED ON : ஜன 15, 2014

Google News

PUBLISHED ON : ஜன 15, 2014


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழில் நாம் பேசும்போது 'X' என்பவர் எதைத் தொட்டாலும் அது பொன்னாகி விடும் என்பார்கள். அவர் வேறு யாரும் இல்லை. பல விவசாயிகளுக்குத் தெரிந்த சுந்தரம் சபேசன் ஆவார். (கைபேசி எண்: 91766 29570) பல வருடங்கள் மகாராஜபுரம் கிராமத்தில் இரவு பகல் ஆராய்ந்து மகாராஜபுரம் பலா ரகம் என்பதை பிரபலப்படுத்தி வருகிறார். இதில் கிடைக்கும் லாபம் இதனை அள்ளித்தரும் அமுதசுரபியாக கருதுகிறார். அந்த அளவிற்கு வருமானத்தைத் தருகின்றது.தமிழ்நாட்டில் இருக்கும் பலா ரகங்களில் மகாராஜபுரம் ரகம் நல்ல பெயரை எடுத்து வருகின்றது. இந்த கட்டுரையை எழுதுபவர் சுந்தரம் அவர்களை நன்கு தெரிந்தவர். விவசாயத்தில் ஜாம்பவானான இவர் தஞ்சாவூரில் எல்லா நெல் விவசாயிகளுக்கும் நன்கு தெரிந்தவர். சுந்தரம் அவர்களது வீடானது அடுத்த தெருவில் உள்ளது. இந்த ரகத்தை மிகவும் விரும்பிய சுந்தரம் அதிலிருந்து பல்பினை எடுத்து 50 பைசாவிற்கு விற்பனை செய்தார். அதிர்ஷ்டவசமாக பல்பினை நட்டபோது தாய்ச்செடி மாதிரியே அது இருந்தது. தனக்கு அதிர்ஷ்டவசமாக இருந்தது இந்த தாய் மரங்களாக இருந்தவை 65 வருடங்கள் வயதை கொண்டிருந்தன. ஒட்டுக்கன்றுகளை (இவைகளின் வயது 20 வருடங்கள்) பராமரித்து வந்தார். இவைகள் பலன் கொடுக்க ஆரம்பித்தன. பழங்களின் ருசி அருமையாக இருந்தது. விஞ்ஞானிகள் அடிக்கடி சுந்தரம் அவர்கள் பண்ணைக்கு வந்து பழங்களைக் கண்டு மகிழ்ந்தார்கள். சுந்தரம் அவர்களது ஆராய்ச்சியின் திறமைக்கு மதிப்பு கொடுத்தார்கள். பண்ணைக்கு வருபவர்கள் பழங்களின் செழிப்புத்தன்மையைக் கண்டும் மகிழ்ந்தனர். இவைகளை பாதுகாக்க சுந்தரம் அவர்கள் பழங்களுக்கும் தரைக்கும் இடையில் பிளாஸ்டிக் தாள்களை போட்டு பழங்களின் தரத்தை பாதுகாத்தார். இவ்வாறாக சுந்தரம் பலா சாகுபடியை தீவிரமாக்கினார். பழங்களின் விலை கணிசமாக உயர்ந்தது. லாபம் கிடைத்தது.

பலா பழங்களின் நன்மை: பலா பழங்கள் உடல் நலத்திற்கு உதவுகின்றது. இதில் வைட்டமின் சத்துக்கள் அதிகம் உள்ளது. இது புற்றுநோய் வராமல் தடுக்கின்றது. ரத்த அழுத்தம் இல்லாமல் பாதுகாக்கின்றது. ஆஸ்துமா வராமல் தடுக்கின்றது.

முக்கனியில் பலா: இந்தியாவை பிறப்பிடமாக கொண்ட பலா உண்ணக்கூடிய பழங்களிலேயே பெரிய பழம் எனக் கருதப்படுகிறது. பலா ஏழைகளின் பழம் என்றும் பொருள் ஆகும். மா, வாழை இரண்டையும் விட பலா நல்ல பயன் தருகின்றது. பலதரப்பட்ட மண்ணிலும், குறிப்பாக தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளிலும் எளிதாக வளர்க்க முடியும். தண்ணீர் மட்டும் தேங்கக்கூடாது.

குழியின் அளவு மற்றும் நடவுமுறை: மூன்று அடிக்கு, மூன்று அடிக்கு, மூன்று அடி குழி எடுக்க வேண்டும். மேல் மண்ணில் ஒரு கிலோ மண்புழு உரம் கொண்டு மண்ணை நிரப்ப வேண்டும். கரையான் பாதிப்பை தவிர்க்க குழிக்கு 25 கிராம் கார்போபியூரான் குழியில் இட்டு ஓரிரு நாட்களுக்கு பிறகு ஒட்டு ரக கன்றுகளை நடுவது சிறந்தது. ஏனெனில் ஒட்டு தர மரங்களின் கிடைக்கும் பலாவின் காய்களும், பருவமும் பழத்தின் தரமும் ஒரே மாதிரியாக இருக்கும். எக்டேருக்கு 400 ஒட்டுச் செடிகள் தேவை. ஒட்டு பலா கன்றுகளை நட்டு மூன்று ஆண்டுகளில் பலன் கொடுக்கும். பலாவை நட்ட தொடக்கத்தில் வாரத்தில் ஒருமுறையும் பின்னர் தேவைக்கு ஏற்ப பாசனம் செய்ய வேண்டும்.

செய் நேர்த்தி: காய்ந்த இலை, தழைகளை செடியின் தூர்பாகத்தில் பரப்பி மண்ணில் ஈரம் காக்க வேண்டும். காய்ந்த குச்சிகளை கவாத்து செய்ய வேண்டும். மரம் காய்க்க ஆரம்பிக்கும் முன் பசுந்தாள் உரச்செடிகள் மற்றும் பயிர்வகை செடிகளை வளர்த்து மக்கச் செய்ய வேண்டும்.

பயிர் பாதுகாப்பு: குறிப்பாக தக்க அளவில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் இல்லை.

வயது: நட்ட 3ம் ஆண்டு ஒட்டுக் கன்றுகள் காய்க்க துவங்கும். பூத்து காய்த்து பிஞ்சுகள் முதிர்ச்சி அடைய 90 முதல் 100 நாட்களாகும். மகசூல் ரகத்தைப் பொறுத்தது.

உரிய பட்டம்: ஏப்ரல்-ஜூன் மாற்றுப்பட்டம்: நவம்பர் - டிசம்பர்

மகசூல்: குறைந்த அளவு ஒரு மரத்திற்கு 100 பழங்கள் கிடைக்கும். ஒரு வருடத்தில் ஒரு மரத்தின் மூலம் ரூ.10,000 கிடைக்கும்.

தென்னந்தோப்பில் பலா மரங்கள்: தமிழ்நாட்டில் தென்னை சாகுபடி அதிக அளவில் உள்ளது. இதில் ஊடுபயிராக பலா மரங்களை சாகுபடி செய்யலாம். இதில் லாபம் நல்ல முறையில் கிடைக்கும். ஆண்டு முழுவதும் பலா மரத்தில் இலைகள் பசுமையாக இருப்பதால் மரத்தின் அடியில் நிழல் விழுகிறது. காப்பி செடிக்கு எப்போதும் நிழல் தேவை. ஆகவே காப்பி தோட்டங்களில் பலா பயிரிடப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 70 -80 தென்னை நடப்பட்டுள்ள வயல்களில் நான்கு மரங்களுக்கு நடுவில் ஒரு பலா வீதம் ஏக்கருக்கு 50 ஒட்டுக்கன்றுகள் நடவு செய்யலாம். நட்ட பத்து ஆண்டுகளில் 50 மரம் X25 காய்கள் ஙீ ரூ.50 = ரூ.62,500 பலாவில் மட்டும் கிடைப்பது உறுதி. ஆண்டிற்கு ஆண்டு மரம் வளர, வளர விளைச்சலும், வருமானமும் அதிகரிக்கும். பலா சாகுபடியில் விவசாயிகள் அதிக அளவில் சாகுபடி செய்து லாபம் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் சுந்தரம் பாடுபடுகிறார்கள்.

- எஸ்.எஸ்.நாகராஜன்






      Dinamalar
      Follow us